Countries with Higher Rates of Online Returns - ஈ காமர்ஸ் தளங்களில் பொருள்களை வாங்கி விட்டு அதை அதிகமாக ரிட்டன் செய்யும் நாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரு பொருளை வாங்க வேண்டுமானால், வாடிக்கையாளர் கடைத்தெருவிற்கு வந்து, அதற்காக தனியாக நேரம் செலவிட்டு, அங்கும் இங்கும் அதை தேடி அலைந்து, எங்கு விலை கம்மியாக இருக்கிறது என பார்த்து, வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவதற்குள் ஒரு அரை நாள் ஆவது ஓடி விடும், அந்த அரை நாளை மிச்சப்படுத்த தான், ஈ காமர்ஸ் எனப்படும் விற்பனை தளங்கள் வந்தன.
வாடிக்கையாளர்கள் இங்கு அவர்கள் விருப்பமான பொருள்களை வீட்டில் இருந்தே தேடிக் கொள்ள முடிகிறது, மற்ற பிராண்ட்கள் என்ன விலை என்பதை வீட்டில் இருந்தே வேறுபடுத்த முடிகிறது, வீட்டில் இருந்தபடியே பொருள்களை பெறவும் முடிகிறது, இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு தேவையாக காய்கறி முதல் வாஷிங் மெசின் வரை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
தற்போதெல்லாம் ஈசியான ரிட்டன் ஆப்சனும் இருப்பதால் மக்கள் தைரியமாக ஈ காமர்ஸ்சை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர், ஆனால் தற்போது ஈ காமர்ஸ் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக ரிட்டன் ஆப்சன் இருக்கிறது, அதிகப்படியான ரிட்டன்களால் அவர்களின் சந்தை மூலதனமும் இலாபமும் பெரிதாக பாதிக்கப்படுகிறதாம்.
அந்த வகையில் ஈ காமர்ஸ்சில் அதிகமாக ரிட்டன் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதாம், அதற்கு அடுத்தபடியாக சீனா, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இருப்பதாக தகவல், இந்திய சந்தை என்பது மிகப்பெரியது என்பதனால் தான் ஈ காமர்ஸ் நிறுவனங்கள் இங்கு தங்கள் அடித்தளத்தை துவங்குகின்றன.
" ஆனால் தற்போது அதிகப்படியான ரிட்டன்கள் வருவதால், அதை எதிர்கொள்ள முடியாமல் ஈ காமர்ஸ் தளங்களும், ஈ காமர்ஸ் விற்பனையாளர்களும் திணறி வருகின்றனர் "