Why India Does Not Having Largest Gold Reserve - இந்தியா உலகிலேயே தங்கம் அதிகம் நுகரும் நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவில் தங்கத்தின் இருப்பு குறைவாக இருப்பதற்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகிலேயே தங்கத்தை அதிகம் நுகரும் நாடாக இந்தியா இருக்கிறது, காரணம் தங்கம் இந்திய கலாச்சாரங்களோடு ஒன்றிய ஒரு உலோகமாக இருக்கிறது. இந்தியாவில் திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகல் என்றாலே தங்கம் இல்லாமல் கொண்டாடுவதே இல்லை. இது தேசத்தில் தங்கத்திற்கான தேவையை தினம் தினம் அதிகரிக்கிறது.
கடந்த 2024 யில் மட்டும் இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு என்பது 802 மெட்ரிக் டன் ஆக இருப்பதாக தகவல், நாம் இவ்வளவு தங்கம் வாங்குகிறோம் அப்புறம் ஏன் நம்மிடம் தங்க இருப்பு அதிகம் இல்லை என்பதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன, அதில் முதல் காரணம் இந்தியாவில் தேவை அதிகம் ஆக இருக்கிறது உற்பத்தி என்பது மிக மிக குறைவாக இருக்கிறது.
இந்தியா ஒரு வளரும் நாடாக இருப்பதால் பொருளாதார சிக்கல்கள், செலவீனங்கள் ஏற்படும் போதெல்லாம் மத்திய வங்கியில் இருப்பில் இருக்கும் தங்கத்தை செலவிட வேண்டிய அவசியம் இருக்கிறது, இது போக தங்கத்தின் மீதான முதலீடு என்பதும் இந்தியாவில் அதிகம் இருப்பதால் இந்திய அரசால் தங்கத்தை அதிகம் இருப்பு வைத்து இருக்க முடிவதில்லை.
உலகிலேயே அமெரிக்கா தான் தனது கைவசம் அதிகமான தங்க இருப்பை கொண்டு இருக்கிறது, அவர்களிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பு மட்டும் 8,133 மெட்ரிக் டன் ஆக இருப்பதாக தகவல், அதே சமயத்தில் இந்தியாவில் வெறும் 876 மெட்ரிக் டன் மட்டுமே இருப்பு இருக்கிறது, கிட்டத்தட்ட இந்தியாவை விட 10 மடங்கு தங்கத்தை இருப்பு வைத்து இருக்கிறது அமெரிக்கா.
" இந்தியாவும் ரிசர்வ் வங்கியும் இணைந்து தங்கத்தை இருப்பு வைக்க பல்வேறு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன, இந்தியாவில் தங்கத்தின் மீது இருக்கும் ஈர்ப்பு குறையும் போது எதிர்காலத்தில் அதிக இருப்பு சாத்தியம் ஆகலாம் "