Yeni Padi Mittai Kadai Ideas - கொஞ்சம் முதலீடு செய்து ஏணிப்படி மிட்டாய் கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
முன்பெல்லாம் திருவிழா என்றாலே அங்கு கண்டிப்பாக ஏணிப்படி மிட்டாய்க்கடை இல்லாமல் இருக்காது, பொதுவாக திருவிழாக்கு சென்ற அனைவருமே சாமியைக் கும்மிட்டு விட்டு திரும்பும் போது, ஏணிப்படி மிட்டாய் வாங்காமல் திரும்ப மாட்டார்கள், ஏணிப்படி மிட்டாயிலும் இரண்டு வகை இருக்கும், ஒன்று சீனி ஏணிப்படி மிட்டாய், இன்னொன்று கருப்பட்டி ஏணிப்படி மிட்டாய்.
ஒரு பனையோலைப் பெட்டியில் வைத்து சூடாக எடை போட்டு தருவார்கள், அதை நாவில் வைக்கும் போதே அந்த பாகு அப்படியே உள்ளுக்குள் ஊறும், என்ன தான் இன்று பேக்கரிகளில் பல பல ஸ்வீட்கள் வித்தியாசம் வித்தியாசம் ஆக மார்க்கெட்டுகளில் கிடைத்தாலும் கூட, அந்த திருவிழா ஏணிப்படி மிட்டாய்களில் சுவையை எதுவும் எட்டி விட முடியாது என்பது தான் உண்மை.
இப்போதும் அந்த ஏணிப்படி மிட்டாய்களை பலரும் பேக்கரிகளில் தேடி அலைவது உண்டு, அந்த வகையில் ஒரு தனித்துவமான ஏணிப்படி மிட்டாய் கடை வைத்து, அதை பாரம்பரிய முறைப்படி பனையோலைப் பெட்டியில் வைத்து சந்தைப்படுத்தினால் நிச்சயம் அதற்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கும், ஒரு நல்ல மாஸ்டரை முதலில் நியமிக்க வேண்டும்.
தரமான பொருள்களை வாங்கி, தரமான முறையில் ஏணிப்படி மிட்டாய்களை தயாரித்து, முறையாக உணவு பாதுகாப்பு லைசென்ஸ் எல்லாம் வாங்கினால், நீங்கள் ஆன்லைனிலும் கூட உங்கள் தயாரிப்பை விற்கலாம், கடைகள் போட்டும் விற்கலாம், கிலோ ரூ 260 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, குறைந்த பட்சம் ஒரு கிலோவிற்கு 35% வரை இலாபம் இருக்கும்.
" தினசரி ஒரு 7 கிலோ முதல் 10 கிலோ வரை சந்தைப்படுத்தினால் கூட, சராசரியாக மாதம் ரூ 50,000 வரை நிச்சயம் வருமானம் பார்க்க முடியும் ”