Vilvam Leaf Selling Ideas - வில்வம் இலை விற்பனையில் ஈடுபட்டு எப்படி ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
சரி முதலில் வில்வம் இலைக்கான தேவை என்ன என்பது குறித்து முதலில் பார்க்க வேண்டும் அல்லவா, ஒரு பொருளுக்கு மார்க்கெட்டில் ஏதாவது ஒரு விதத்தில் மதிப்பு இருந்தால் மட்டும் தானே பொருள்களை சந்தைப்படுத்த முடியும், எந்த விதத்திலும் சந்தைகளில் தேவை இல்லாத பொருள்களை சந்தைப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை தானே.
அந்த வகையில் வில்வம் இலைக்கான மார்க்கெட் என்பது கோவில்களிலும், ஒரு சில மருத்துவ மார்க்கெட்களிலும் இருக்கிறது, வில்வம் இலை சிவனுக்கு உகந்தது என்பதால் பெரும்பாலும் சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் வில்வம் இலையை வாங்கி செல்வார்கள், ஆயுர்வேத மருத்துவங்களிலும் வில்வம் இலையின் பயன்கள் பெருமளவில் இருக்கிறது.
சரி இந்த வில்வம் இலையை எங்கு கொள்முதல் செய்வது என்றால் கிராமங்களிலும், காடுகளிலும், வெட்டவெளிகளிலும் அதுவாக வளர்ந்து கிடக்கும், இதை நூல்களில் கோர்த்தோ அல்லது பேப்பர்களில் மடித்தோ விற்பனைக்கு வைத்துக் கொள்ளலாம், பொதுவாக ஒரு 15 முதல் 20 இலை கொண்டு ஒரு தொகுப்பு 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதை கூவி கூவி விற்க வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை, கோவில்களின் வாசலில் ஒரு சேர் போட்டு அமர்ந்தால் போதும், ஒரு நாளைக்கு ஒரு 20 வில்வம் இலை தொகுப்பு விற்றால் கூட நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம், பிரதொஷ நாட்களின் 50 தொகுப்பு கூட விற்கும், எப்படி பார்த்தாலும் சராசரியாக மாதம் ரூ 12,000 முதல் 15,000 வரை வில்வ இலையின் மூலம் வருமானம் பார்க்கலாம்.