Vetti Ver Value Added Products - வெட்டி வேரில் பல மதிப்பு மிக்க பொருட்கள் தயார் செய்ய முடியும் அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெட்டி வேர் என்பது கிராமங்களில் சாதாரணமாக வரப்புகளில், மேச்சல் நிலங்களில், வயல் வெளிகளில் என எல்லா இடங்களிலும் பார்க்க முடியும், அந்த காலத்தில் கிராமத்தில் வரப்பு வெட்ட செல்பவர்கள் வெட்டி வேரை வெட்டி வந்து அதை நீருக்குள் போட்டு அந்த நீரை அடுத்த நாள் பருகுவர், தேங்காய் எண்ணெய்க்குள் போட்டு வைத்தும் ஒரு சிலர் தலையில் தேய்ப்பர்.
வெட்டி வேர் என்பது பல மருத்துவ குணங்கள் மிக்கது, உடலுக்கு குளிர்ச்சியை தரும், உடல் உஷ்ணம் தணிக்கும், முடி வளர்தலையும் ஊக்குவிக்கும், ஒரு சிலர் வாசத்திற்காகவும் பயன்படுத்துவார்கள், அந்த வகையில் வெட்டி வேருக்கான மார்க்கெட் மதிப்பு என்பது பொது சந்தையிலும், ஹெல்த் ரிலேட்டடான மார்க்கெட்டுகளிலும் நன்றாகவே இருக்கிறது.
சரி இதை எப்படி எல்லாம் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற முடியும் என்றால் வெட்டி வேரில் ஸ்க்ரப்பர்கள் செய்யலாம், வெட்டி வேரில் எண்ணெய் எடுக்கலாம், வெட்டி வேரில் பொடி தயாரிக்கலாம், வெட்டி வேரில் திரவியம் தயாரிக்கலாம், வெட்டி வேரில் பிரஷ்கள் தயாரிக்கலாம், வெட்டி வேரில் கூடை போன்ற கலை பொருட்களும் தயாரிக்கலாம்.
தேங்காய் எண்ணெயுடன் வெட்டி வேரை சேர்த்து அதையும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்கின்றனர், ஆன்மீக ரீதியாகவும் ஹோமங்களுக்கு வெட்டி வேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இயற்கையான முறையில் ஆனதும், எளிதில் மட்க கூடியதாகவும் இருப்பதால் வெட்டிவேர் மூலம் தயாரிக்கும் பொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.