Vallarai Keerai Planting Business - வல்லாரை கீரை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் எப்படி ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Vallarai Keerai Planting Business - வல்லாரை கீரை வளர்ப்பிற்கு முன் வல்லாரை கீரையால் என்ன பயன் என்பது குறித்து தெரிவது அவசியம், வல்லாரை கீரை என்பது பல்வேறு மருத்துவ பயன்கள் மிக்கது, முக்கியமாக மூளைக்கு பலம் தர கூடியது, நினைவாற்றலை அதிகரிக்க கூடியது, வாத பிரச்சினைகளையும் மூளை நரம்பு கோளாறுகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றதாக அறியப்படுகிறது.
அந்த வகையில் வல்லாரை கீரை என்பதற்கு ஒரு சரியன மார்க்கெட் மருத்துவ சந்தையில் இருக்கிறது, இதை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை, கீரை, கூட்டு, பொடி, குழம்பு என அனைத்திலும் பயன்படுத்தலாம், ஒரு சிலர் அப்படியே வதக்கி உணவுகளிலும் பிசைந்தும் சாப்பிடுவார்கள், தினமும் எடுத்துக்கொள்ளும் போது மூளை வலுப்பெறும்.
சரி இந்த வல்லாரை கீரையை வளர்க்க வேண்டுமானால் முதலில் விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும், வேளாண் கல்லூரிகள் அல்லது வேளாண் சந்தைகளில் வல்லாரை கீரைக்கான நல்ல நாட்டு விதைகளை வாங்கி கொள்ள முடியும், 100 விதைகள் 100 ரூபாய்க்குள் தான் வரும், விதைத்ததும் பெரிய பராமரிப்பு எல்லாம் தேவை இல்லை, காய்கறி கழிவுகளையே உரமாக போடலாம்.
பூச்சி அடித்தால் இயற்கையான நவபாசன் உரம் தெளிக்கலாம், 40 முதல் 60 நாட்களில் கீரையை அறுவடை செய்ய முடியும், ஒரு கட்டு சந்தையில் ரூ 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது, கீரை கட்டு விற்கவில்லை என்றால் கூட இலைகளை காய வைத்து பொடியாக்கி அந்த பொடிகளையும் சந்தைப்படுத்தலாம், ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 10 வாடிக்கையாளர்களை அணுக முடிந்தால் கூட மாதம் ரூ 10,000 வரை வருமானம் பார்க்கலாம்.