Valentine Rose Selling Ideas - இரண்டு நாள்ள கைல ரூ 10,000 வரை சம்பாதிக்கனும்னு நினைக்கிறவங்க, இன்னிக்கே இந்த ரோஜா விற்பனையை ஸ்டார்ட் பண்ணிடுங்க.
காதலர் தினம் என்பது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 அன்று உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது, அதுவரை அதற்கு முன்னால் வரை ஏதோ ஒரு உறவுகளாக, ஏதோ பெயர் வைக்க முடியாத பிணைப்புகளாக இணைந்து பேசி வந்த இரண்டு பேர்கள் தங்கள் உறவுகளை அடையாளப்படுத்திக் கொள்ள இருவருக்குள்ளும் தெளிவுபடுத்திக் கொள்ளும் விதமாக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சரி, இந்த இருவருக்கும் இடையிலான காதல் என்பது எப்படி பரிமாறப்படுகிறது என்றால் பரிசுகள், லெட்டர்கள், கவிதைகள் என பல வாயிலாக பரிமாறப்படுகிறது, ஆனால் இதையெல்லாம் தவிர்த்து ஒரு ரோஜாக்களில் காதலை சொல்வது என்பது பெரும்பாலும் ரசிக்கப்படுகிறது, அந்த ரோஜாவில் என்ன இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது ஆனால் ரோஜா காதலை வெளிப்படுத்துகிறது.
அந்த வகையில் இந்த காதலர் தினத்தை காதலில் மட்டும் திளைக்க வைக்காமல், கையில் கொஞ்சம் பணமும் சேர வைக்க ரோஜாக்களை தெரிவு செய்து ஒரு பார்ட் டைம் தொழில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம், முதலில் மொத்த விலை பூ மண்டிகளுக்கு நேரடியாக சென்று பல கலர்களில் ரோஜாக்களை கிலோ கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஓரு கிலோ ரோஜாக்கள் கலரை பொறுத்து ரூ 60 முதல் 300 ரூபாய் வரை அசல் ஆகும், ஒரு கிலோ ரோஜாக்களில் குறைந்தது 15 ரோஜாக்கள் முதல் 18 ரோஜாக்கள் வரை இருக்கும், ஒரு ரோஜாவின் விலை 60 முதல் 75 ரூபாய் வரை விற்கப்படும் ஒரு குட்டி ரோஜா பூங்கொத்து 300 ரூபாய் வரை விற்கப்படும், இரண்டு நாட்களில் ஒரு 10 கிலோ சந்தப்படுத்தினால் கூட ரூ 10,000 வரை வருமானம் பார்த்து விடலாம்.