Selling Used Cars And Bikes - பயன்படுத்திய கார்கள் மற்றும் பைக்குகளை விற்பனை செய்வதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் பயன்படுத்திய கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனையை துவங்குவதற்கு முன்பு அதன் சந்தை மதிப்பு, எங்கு வைக்கலாம், இடம் எவ்வளவு தேவைப்படும், கொஞ்சம் கார் பைக்குகள் குறித்த தொழில் அறிவு உள்ளிட்டன குறித்த ஆழ்ந்த புரிதல்கள் அவசியம், ஒரு தொழிலில் இறங்குவதற்கு முன்பாக அந்த தொழில் குறித்த புரிதல்கள் இருந்தால் மட்டும் தான் அந்த தொழிலில் நிலைக்க முடியும்.
சரி முதலில் சந்தை மதிப்பு குறித்து பார்க்கலாம், இந்திய அளவில் பழைய கார்கள் மற்றும் பைக்குகளுக்கான வருடாந்திர வர்த்தகம் என்பது 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது, பொதுவாக மார்க்கெட்டுகளில் புது புது மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் புது புது அப்டேட்டுகளுடன் வரும் போது, பழைய கார்கள் மற்றும் பைக்குகளை விற்பனை செய்ய பயனர்கள் முன் வருகிறார்கள்.
அதே சமயத்தில் அதிக பணம் கொடுத்து புதிய பைக்குகள், கார்களை வாங்க முடியாத பயனர்கள் பயன்படுத்திய கார்கள் மற்றும் பைக்குகளை அணுகுகின்றனர், இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பு பாலமாக செயல்பட்டு இருவருக்கும் ஒரு நல்ல சர்வீஸ்சை கொடுப்பது தான் இந்த பயன்படுத்திய கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனை செய்யும் ஏஜென்சிகளில் வேலை.
இதற்கு முதலில் நல்ல குடோன் போன்ற பெரிய அமைப்புடன் தேவை, சிட்டி அல்லது சிட்டிக்கு கொஞ்சம் அவுட்டர் என்றாலும் சரி தான், முதலில் தொழிலை முறையாக ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும், பயன்படுத்திய கார்களை பைக்குகளை பயனர்கள் மூலமும் வாங்கலாம் அல்லது தவணை கட்ட முடியாமல் கொள்முதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு வரும் வண்டிகளை ஏலம் எடுத்தும் வாங்கலாம்.
பொதுவாக வண்டிகளை விற்க வரும் பயனர்களிடம் 5 முதல் 7 சதவிகிதம் வரை கமிஷன் பெறுவார்கள், ஒரு சில ஏஜென்சிகள் 10 சதவிகிதம் வரை கமிஷன் வாங்குகிறார்கள், இது போக விற்பனைதாரர்களிடம் பேசி வாகனங்களுக்கு நல்ல மதிப்பை பெறுவது விற்பனையாளர்களின் சாமர்த்தியமாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு 5 கார்கள் 5 பைக்குகள் விற்றால் கூட மாதம் இலட்சங்களில் வருமானம் பார்க்கலாம்.
" நல்ல தரமான பயன்படுத்திய கார்களை பைக்குகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, உங்கள் நிறுவனத்திற்கு வரும் நன்மதிப்பு, ஆன்லைன் வர்த்தகங்களை உடைத்து உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியையும், இலாப பாதையையும் உறுதி செய்யும் "