• India
```

தூதுவளை வளர்ப்பு...வெறும் 500 ரூபாய் முதலீடு செய்தால்...மாதம் ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Thuthuvalai Planting Business

By Ramesh

Published on:  2025-02-28 10:12:14  |    209

Thuthuvalai Planting Business - தூதுவளை வளர்ப்பில் ஈடுபட்டு எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

தூதுவளை வளர்ப்பில் ஈடுபடுவதற்கு முன், தூதுவளைக்கான தேவை என்ன இங்கு இருக்கிறது என்பது குறித்து முதலில் பார்க்கலாம், தூதுவளையை பொதுவாக மூலிகைகளின் அரசி என ஆயுர்வேத மருத்துவர்கள் கொண்டாடுவார்கள், பொதுவாகவே தூதுவளையின் இலைகள், காய்கள், வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.

தூதுவளையை கீரையாக, தூதுவளை பொடியாக, தூதுவளை விதையாக என எப்படி வேண்டுமானாலும் சந்தைப்படுத்தலாம், தற்போது மக்கள் மருந்துகளுக்காக ஆயுர்வேதத்தை அதிகமாக நாடுவதால் தூதுவளைக்கு என்று நிச்சயம் நல்ல சந்தைமதிப்புகள் இருக்கும், அதனால் தூதுவளை தோட்டம் அமைக்க நினைப்பவர்கள் தைரியமாக ஆரம்பிக்கலாம்.



சரி எப்படி வளர்ப்பது என்றால், முதலில் விதைகளை வேளாண் சந்தைகள் அல்லது வேளாண் கல்லூரிகளில் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும், பின்னர் நீங்கள் தோட்டம் வைத்து இருந்தால் தோட்டத்தில் இருக்கும் மண்களை கிளறி நீர் தெளித்து இரண்டு நாட்கள் உலர வைத்த பின் விதைகளை விதைக்க வேண்டும், 30-45 நாட்களில்யே நன்கு இலை தளிர் விட ஆரம்பித்து விட வேண்டும்.

பூச்சிகள் வந்தாலோ வளர்ச்சி கம்மியாக இருந்தாலோ நவ பாசன உரம் தயாரித்து தெளிக்கலாம், ஒரு 50 நாட்களிலேயே இலைகளை பறித்து கீரையாக விற்க ஆரம்பிக்கலாம், ஒரு தூதுவளை கீரை கட்டு 30 ரூபாய் வரை விற்கிறார்கள், காய்ந்த இலைகளை அரைத்து பொடியாக்கி ஆயுர்வேத சந்தைகளில் கொடுக்கலாம், 100 கிராமின் மதிப்பு 50 ரூபாய் விற்கிறார்கள்.

" எப்படிப்பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட சந்தைக்குள்ளாகவே மாதம் ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம், தயாரிப்பு பொருளை முறையாக ஆவணப்படுத்தி ஈ காமர்ஸ் தளங்களிலும் விற்றால் இன்னும் வருமானத்தை அதிகரிக்கலாம் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas