Thuthi Leaf Powder Making - துத்தி இலை பொடி தயாரிப்பில் ஈடுபட்டு எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
துத்தி இலை பொடி தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன், துத்தி இலை பொடிக்கான தேவை என்ன என்பது குறித்து பார்ப்பது அவசியம், துத்தி இலை உடல் சூடு தணிக்கும், மூல நோய்க்கு துத்தி இலை தரும் தீர்வை அல்லோபதியால் கூட தர இயலாது, மேலும் இப்பொடியை கொஞ்சம் வெந்நீரில் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் சறும பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
அந்த வகையில் துத்தி இலை பொடிக்கான தேவை என்பது பல துறைகளில் இருக்கிறது, சரி இந்த துத்தி இலையை எப்படி கொள்முதல் செய்வது என்றால், சாதாரணமாக காடுகளில், வெட்ட வெளிகளில், வயல் பரப்புகள், மேய்ச்சல் நிலங்களில் என சாதாரணமாக படர்ந்து கிடக்கும், வீடுகளில் எடுத்து தோட்டம் வைக்க போகிறீர்கள் என்றாலும் வைத்து கொள்ளலாம்.
சரி முதலில் இலையை ஏதாவது காடுகளில் பறித்து வந்து ஒரு ஒரு வாரத்திற்கு நிழலில் காய வைக்க வேண்டும், இலை மிருதுவானதும் அதை மில்களிலோ அல்லது நீங்களாகவோ அரைத்து நன்கு பொடியாக்கி கொள்ள வேண்டும், பின்னர் பாக்கெட்டுகளில் அல்லது டப்பாக்களில் 50 கிராம், 100 கிராம் என போட்டு வைத்து ஆயுர்வேத கடைகளில் அல்லது நேரடி முறையில் சந்தைப்படுத்தலாம்.
100 கிராம் துத்தி இலை பொடி சந்தைகளில் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது, முறையாக உங்கள் தயாரிப்பை ஆவணப்படுத்திக் கொண்டால் ஈ காமர்ஸ் தளங்களிலும் தயாரிப்புகளை சந்தைப்படுத்த முடியும், மாதத்திற்கு ஒரு 10 கிலோ சந்தைப்படுத்தினால் கூட எந்த ஒரு முதலீடும் இல்லாமலே கையில் ஒரு 10,000 ரூபாய் வருமானம் ஈட்டி விட முடியும்.