Meal Maker Packing - மீல் மேக்கர் எனப்படும் சோயாவை பேக்கிங் செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் எப்படி குறிப்பிடத்தக்க வருமானம் பார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீல் மேக்கர் எனப்படும் சோயா என்பது சிக்கன் மற்றும் மட்டன் எடுக்க முடியாத பட்ஜெட் பத்மநாபன்களுக்கு ஒரு பட்ஜெட் சிக்கன் மற்றும் மட்டன் தான் அந்த வகையில் இந்த மீல் மேக்கரை ஒரு 20 ரூபாய்க்கு வாங்கினாலே ஒரு சுவையான கிரேவி வைத்து விடலாம், இன்னும் ஒரு 15 ரூபாய்க்கு எக்ஸ்ட்ராவாக வாங்கினால் மீல் மேக்கர் பிரியாணி வைத்து விடலாம்,
அந்த வகையில் இந்த மீல் மேக்கருக்கான சந்தை என்பது நன்றாகவே இருக்கிறது, மார்க்கெட் மதிப்பும் குறைவில்லாமல் இருப்பதால் ஒரு சிறிய தொழிலை தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும், சரி எப்படி சந்தைப்படுத்துவது என்றால், முதலில் ஏதாவது ஒரு ட்ரேடிங் கம்பெனியில் மீல் மேக்கரை மொத்த விலையில் வாங்கி கொள்ள வேண்டும்.
20 கிலோ பேக்கிங்களாக மூடைகளாக இருக்கும், மொத்தவிலையில் ரூ 1400 ரூபாய்க்கு வாங்க முடியும், சரி எப்படி பேக்கிங் செய்வது என்றால் பேக்கிங் கவர்கள் கடைகளை வாங்கிக் கொண்டு 50 கிராம் பாக்கெட்டுகளாக போட்டு 10 ரூபாய் பாக்கெட்டுகளாக விற்கலாம், மொத்த விலை கடைக்கு ஒரு பாக்கெட் 7 அல்லது 8 ரூபாய்க்கு கொடுக்கலாம்.
மொத்த விலையில் உங்களுக்கு கிலோ 70 ரூபாய் அசல் ஆகும், அதுவே 10 ரூபாய் பாக்கெட்டுகளாக ஒரு கிலோவை போடும் போது 20 பாக்கெட்டுகள் போடலாம், மொத்த விலைக்கு விற்கும் போது 1 கிலோ (20 பாக்கெட்டுகள்) ரூ 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை ஆகும், அந்த வகையில் ஒவ்வொரு கிலோவிற்கும் சோயா பேக்கிங்கில் இரட்டிப்பான இலாபம் இருக்கும்.
" பேக்கிங்களுக்கு மெசின்கள் பயன்படுத்தும் போது தயாரிப்புகளை அதிகம் ஆக்க முடியும், சந்தையையும் விரிவாக்க முடியும் "