Sodakku Thakkali Business - சொடக்கு தக்காளி வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாதாரண சொடக்கு தக்காளி, நாமெல்லாம் அத நெத்தில அடிச்சு விளையாடுவோம், அதுல என்ன மார்க்கெட் இருக்க போகிறது என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம், அண்டை நாடுகளில் ஒரு கிலோ சொடக்கு தக்காளி கிலோ ரூ 3000 வரை விற்கப்படுகிறதாம், அதற்கு காரணம் என்ன என்றால் அதில் இருக்கும் அதீத மருத்துவ பலன்கள் என கூறப்படுகிறது.
சொடக்கு தக்காளி மற்றும் அதன் இலைகள் மனித உடலுக்கு எத்தகைய நோயையும் எதிர்க்க கூடிய ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் மண்டலத்தை உருவாக்கும் திறன் உடையதாம், இதில் வைட்டமின் A, வைட்டமின் C நிறைந்து காணப்படுகிறதாம் ,கேன்சர் செல்களை எதிர்க்கும் ஆற்றல் கூட இந்த சொடக்கு தக்காளியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக இந்த சொடக்கு தக்காளி கொலம்பியாவில் அதிகம் விளைகிறது, இந்தியாவிலும் மேற்கு வங்காளத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது, சர்வதேச அளவில் சொடக்கு தக்காளிக்கான தேவை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது, தற்போதைக்கு சொடக்கு தக்காளிக்கான மார்க்கெட் உலகளாவிய அளவில் 1 பில்லியன் டாலராக இருக்கிறது.
அந்த வகையில் சொடக்கு தக்காளி விதைகளை வேளாண் கல்லுரிகளில் வாங்கி அதை தோட்டங்களில் விதைத்து, சரியான ஏற்றுமதிக்கான ஆவணங்கள் எல்லாம் வாங்கி சரியாக மார்க்கெட்டிங் செய்தால் மாதம் ரூ 40,000 க்கு குறையாமல் வருமானம் பார்க்கலாம், இது குறைந்தபட்சம் தான், மார்க்கெட்டில் தேவை அதிகரிக்கும் அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும்.
" சொடக்கு தக்காளி மட்டும் விற்காமல் அதன் இலையில் மற்றும், காய்ந்த சொடக்கு தக்காளி காய்களில் பொடி தயாரித்தும் சந்தைப்படுத்தலாம் "