Digital Monetization Business Ideas - பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே இந்த டிஜிட்டல் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுவாக பெண்கள் அதும் திருமணம் முடிந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டே வீட்டிற்கு ஏதாவது வருமானம் ஈட்டிக் கொடுக்க முடியுமா என எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள், தற்போது இருக்கும் பொருளாதார சூழலை கையாள வீட்டில் ஒருவர் மட்டும் வருமானத்தை தாங்கி பிடித்துக் கொண்டு இருந்தால் அது சரி வராது, அதனால் பெண்களும் தங்களால் முடிந்ததை செய்ய நினைக்கிறார்கள்.
பெண்கள் வீட்டில் வேலை எல்லாம் முடித்து விட்டு, இருக்கும் கொஞ்ச நேரத்தில் வெளியில் சென்று வேலை செய்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் வீட்டில் இருந்தே எப்படி இந்த டிஜிட்டல் உலகில் பெண்கள் சம்பாதிக்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், முதலில் இதற்கு தேவை ஒரு சமூக வலைதள கணக்கு.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்தால் இன்னும் நன்று, சரி என்ன தான் போடுவது, சும்மா போட்டால் எப்படி ரீச் இருக்கும் என்றால், உங்களுக்கு நன்றாக கன்டன்ட் எழுத தெரியும் என்றால் ஏதாவது ஒரு டாபிக், அல்லது தினசரி ட்ரென்டிங், சமையல் குறிப்புகள், விநோதங்கள் என எதை வேண்டுமானாலும் டைப் செய்து போஸ்ட் ஆக போடலாம்.
சரி எழுதுவது உங்களுக்கு பிரச்சினை என்றால் வீடியோவாக, ரீல்ஸ் ஆக பதிவிடலாம், தினசரி ஒரு 10 - 20 கண்டண்ட் ஆக இருந்தால் கொஞ்சம் பெரிய அளவில் டைப் செய்து பதிவிட வேண்டும், வீடியோவாக இருந்தால் ஷார்ட் வீடியோ நல்ல ரீச் இருக்கும், மாதத்திற்கு ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்ட முடிந்தால் ஒரு 8000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் ஆக பெற முடியும்.
" கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சமூக வலைதள கணக்குகளை விரிவுபடுத்தி, YouTube கணக்கு, ட்விட்டர் கணக்கு என பதிவுகளை அதிகப்படுத்தினால் இன்னும் வருமானத்தையும் அதிகப்படுத்தலாம் "