• India
```

சிகைக்காய் பொடி தயாரிப்பு...500 ரூபாய் முதலீடு செய்தால்...மாதம் ரூ 15000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Shikakai Powder Making Business

By Ramesh

Published on:  2025-01-30 08:25:41  |    147

Shikakai Powder Making Ideas - சிகைக்காய் பொடி தயாரிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Shikakai Powder Making Ideas - பொதுவாகவே ஹெல்த்கேர் பிராடக்டுகள் என்றாலே எப்போதுமே உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரிய சந்தை மதிப்பு இருக்கிறது, அதுவும் இயற்கையான முறையிலான ஹெல்த்கேல் பிராடக்டுகளுக்கு எப்போதுமே சந்தையில் மவுசு மிக மிக அதிகம், எதிர்காலங்களிலும் ஹெல்த்கேர் மற்றும் அழகியல் ரீதியான தயாரிப்புகளுக்கு சரிவே இல்லை என கூறப்படுகிறது.

அந்த வகையில் சிகைக்காய் பொடி தயாரித்து எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், சிகைக்காய் பொடி என்பது முடியை பலப்படுத்துதல், தலைகளில் ஏற்படும் அரிப்புகள், பூஞ்சை பாதிப்புகளை இயற்கையாகவே எதிர்க்கும் தன்மை கொண்டது என்பதால் சிகைக்காய் பொடிக்கு ஹெல்த்கேர் பிரிவுகளில் நம்ம மார்க்கெட் இருக்கிறது.



சரி முதலில் சிகைக்காயை எங்கு கொள்முதல் செய்யலாம், தேடி அலைவதற்கு பதில் இந்தியாமார்ட்டை க்ளிக் செய்து அதில் இருக்கும் டீலர்களை அறிந்து பேசி மொத்த விலையில் கொள்முதல் செய்யலாம், மொத்த விலைக்கு சிகைக்காயை வாங்கும் போது கிலோ ரூ 70 முதல் 200 வரையில் கிடைக்கிறது, மில்களில் திரிக்கலாம், மெசின்கள் வாங்கியும் கூட திரிக்கலாம்.

முதலில் மில்களில் திரித்து சந்தைப்படுத்தி விட்டு, கொஞ்சம் தொழில் டெவலப் ஆனதும் மெசின்கள் வாங்கிக் கொள்ளலாம், சிகைக்காய் திரிக்கும் போது அதோடு கொஞ்சம் செம்பருத்தி அரைத்த கலவையும் சேர்த்துக் கொண்டால் அது வாசமும் கூடவே முடிக்கு பலம் தரும், பொதுவாக சந்தைகளில் 50 கிராம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, 1 கிலோ விற்றாலே அதில் 100 சதவிகிதத்திற்கும் மேல் இலாபம் பார்க்க முடியும்.

" அந்த வகையில் தினசரி ஒரு 2 கிலோ அளவில் சந்தைப்படுத்த முடிந்தால் கூட சராசரியாக மாதம் ரூ 15,000 வரை வருமானம் பார்க்க முடியும் "