• India
```

எக்ஸாம் நோட்ஸ் PDF...ஆன்லைனில் விற்பனை செய்தால்...மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Selling Competitive Exam Notes Online

By Ramesh

Published on:  2025-02-05 10:21:56  |    13

Selling Competitive Exam Notes Online - நீங்கள் பயிற்சி செய்த எக்ஸாம் நோட்ஸ்களை முறையாக ஆன்லைனில் அப்லோட் செய்து எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக அரசு தேர்வுகளுக்கு பயில்பவர்கள் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகின்றனர், பெரும்பாலான நிறுவனங்களில் AI களும், ஆட்டோமேட்டடு மெசின்களும் புகுந்து விட்டதால் வேலை இழப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது, அதனால் பலரும் நிரந்தரமான அரசு வேலையை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

பொதுவாக அரசு வேலைக்கு படிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, ஒரே ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து கொண்டு பாஸ் ஆகி விட முடியாது, அந்த வகையில் பல புத்தகங்களை சிலபஸ்சிற்கு ஏற்ப படித்து நோட்ஸ் எடுக்க வேண்டும், கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒவ்வொருவரின் வீட்டிலும் யாராவது ஒருவர் ஆவது இவ்வாறு நோட்ஸ் எடுத்து படித்துக் கொண்டு இருப்பார்கள்.



சரி நோட்ஸ்கள் இருக்கிறது அதை என்ன செய்ய வேண்டும் என்றால், அந்த நோட்ஸ்களை முதலில் டாகுமெண்ட் ஆக மாற்றிக் கொள்ள வேண்டும், பிரிண்டர் இருந்தால் பிரிண்டர் மூலம் ஸ்கேன் எடுத்தோ அல்லது போன்களில் ஸ்கேனர் ஏற்றியோ PDF ஆக மாற்றிக் கொள்ளலாம், பின்னர் Razorpay அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்து ஒரு அக்கவுண்டை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

பான், ஆதார் கார்டு, வங்கி கணக்கு, மெயில் ஐடி உள்ளிட்டவைகள் இருந்தால் பதிவு செய்து விடலாம், பின்னர் உங்களது PDF களை கூகுள் டிரைவ்களில் போட்டு அந்த லிங்க்களை Razorpay உடன் இணைத்து, அந்த இணைக்கப்பட்ட லிங்கை சமூக வலைதளங்களில் இருக்கும் எக்ஸாம் ரிலேட்டடு குரூப்களில் Share செய்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பெற முடியும்.

" பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அரசு எக்ஸாம் வந்து கொண்டு இருக்கும், அதற்கேற்ப நோட்ஸ்களை சேர் செய்தால் வருமானத்தை அதிகம் ஆக்கலாம், குறைந்தபட்சம் வீட்டில் இருந்து கொண்டே சராசரியாக மாதம் ரூ 10000 வரை வருமானம் இதன் மூலம் பெற முடியும் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas