Sathunavu Maavu Making - சத்துணவு மாவு தயாரிப்பில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக சிறு குழந்தைகள் சிறுவயதில் எதையும் சாப்பிட அடம்பிடிக்கும், அதனால் நல்ல சத்துக்கள் உடம்பில் அவ்வளவாக சேருவதில்லை, அதிலும் தற்போது உள்ள குழந்தைகள் பீட்சா, சைனீஸ் வகைகள் உள்ளிட்டவைகளை விரும்பி உண்பதால் உடலுக்கு சேர வேண்டிய முக்கியமான பல ஊட்டச்சத்துக்களை இழந்து சிறுவயதிலேயே நோய் வாய்ப்படுகின்றனர்.
அவர்களுக்கான தீர்வு தான் இந்த சத்துணவு மாவு, பொதுவாக குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ப்ளன் இதை கொடுத்து வளர்ப்பதை காட்டிலும் சத்துணவு மாவு கொடுத்து வளர்த்தால் சிறு வயதிலேயே குழந்தைகளில் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராகும், எலும்புகள் எல்லாம் நன்கு வலுவடையும், அந்த வகையில் சத்து மாவிற்கான தேவை என்பது நிச்சயம் இருக்கிறது.
சரி இந்த சத்து மாவை எப்படி தயாரிப்பது என்றால் ராகி, கம்பு, சோளம், பாசிப்பயறு, கொள்ளு, வேர்கடலை, சுக்கு இவற்றை சுவைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எடுத்துக் கொண்டு நன்கு நீரில் ஊற வைக்க வேண்டும், முளை விட்டதும் எடுத்து அதை நல்ல வெயிலில் 3 நாட்கள் காய வைக்க வேண்டும், பின்னர் அனைத்தையும் வறுத்து மில்லில் அரைத்து விட வேண்டும்.
இதில் தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து விட்டால் சத்துணவு மாவு ரெடி ஆகி விடும், உணவு பாதுகாப்பு துறையிடம் முறையாக ஆவணப்படுத்திக் கொண்டால் உங்கள் தயாரிப்பை ஈ காமர்ஸ்சிலும் சந்தைப்படுத்த முடியும், பொதுவாக கால் கிலோ 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது, உங்கள் சந்தையை எவ்வளவு விரிவு படுத்துகிறீர்களோ அதை பொறுத்து வருமானம் இருக்கும்.
" பக்காவான பேக்கிங், பக்கவான சுவை, பக்காவான மார்க்கெட்டிங் இந்த மூன்றையும் சரியாக பிளான் செய்து விட்டால் சத்துணவு மாவு தயாரிப்பு தொழிலில் நீங்கள் கொடி கட்டி பறக்கலாம் "