Plastic Bottle Scrap Business Ideas - பழைய வாட்டர் பாட்டில்களை கொள்முதல் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பழைய வாட்டர் பாட்டில்கள் கொள்முதல் செய்வதற்கு முன் அதற்கான தேவை என்ன இருக்கிறது, அதனால் என்ன இலாபம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக ஒரு புதிய பாட்டில் தயாரிப்பதற்காக ஆகும் செலவை விட அதனைஅ மறு சுழற்சி செய்வதற்காக ஆகும் செலவு என்பது கம்மி, அதனால் பழைய பெட் வாட்டர் பாட்டில்களுக்கான தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது.
பொதுவாக பெட் பாட்டில்கள் என்பது இன்று பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன, கூல்ட்ரிங்ஸ், மினரல் வாட்டர், மருந்துகள் என அனைத்துமே இன்று பெட் பாட்டில்களில் தான் வருகின்றன, பொதுவாக ஒரு நாள் ஒன்று ஒரு பெரிய மாலில் மட்டும் 15 கிலோ அளவிற்கு பெட் பாட்டில்கள் கழிவுகளாக சேருகிறதாம், அது போக சிறு சிறு கடைகளில் தினசரி 1 கிலோ, 2 கிலோ வரை சேரலாம்.
முதலில் நாம் செய்ய வேண்டியது இது போன்ற மால்கள், ஜூஸ் கடைகள், குட்டி குட்டி ஸ்டால்கள், சாலையோர கடைகளில் தினசரி தள்ளுவண்டியில் வந்து பெட் பாட்டில்களை எடுத்துக் கொள்வதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், கிலோ ரூ 20 என விலை பேசலாம், அவர்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு கழிவு அதனால் நீங்கள் 20 ரூபாய்க்கு கேட்டாலே எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.
பின்னர் இந்த பழைய பெட் பாட்டில்களை மொத்தமாக வாங்குவதற்கு என்று ஒரு சில ஏஜென்சிகள் இருக்கும், ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை வைத்து எடுப்பார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிலோ வீதம் கொள்முதல் செய்தால் கூட ரூ 1000 முதல் 2000 வரை வருமானம் பார்க்கலாம், நீங்கள் கொள்முதல் செய்யும் கடையை அதிகப்படுத்தும் போது வருமானம் இன்னும் அதிகரிக்கும்.