• India
```

பிரண்டை விற்பனை...முதலீடே இல்லாமல்...மாதம் ரூ 8000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Pirandai Selling Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-24 00:13:31  |    893

Pirandai Selling Ideas Tamil - காடுகள் மற்றும் அடர்ந்த நிலப்பகுதிகளில் கிடக்கும் பிரண்டையை பறித்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Pirandai Selling Ideas Tamil - பிரண்டை பொதுவாகவே பல மருத்துவ குணங்கள் மிக்கது, காடுகளில், பரந்த நிலப்பகுதிகளில் பிரண்டை சாதாரணமாக வளர்ந்து கிடக்கும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் என பல தாதுக்கள் நிறைந்தது, பிரண்டை பசியை தூண்டும், மூளைக்கு பலன் தரும், நல்ல ஞாபக சக்தி கொடுக்கும், செரிமானத் தன்மையை அதிகரிக்கும், கெட்ட கொழுப்பை கரைக்கும்.

இவ்வாறான பல மருத்துவ குணங்கள் மிக்க பிரண்டை தற்போதெல்லாம் சந்தைகளில் பெரிதாக கிடைப்பதில்லை, ஆனால் அதன் பயன்களை மக்கள் உணர்ந்து இருக்கின்றனர், அந்த வகையில் பிரண்டையை வீடுகளில் வளர்த்தோ அல்லது காடுகள் அல்லது பெரும் நிலப்பரப்புகளில் வளரும் பிரண்டையை பறித்து சந்தைப்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்க்க முடியும்.



முதலில் பிரண்டையை பறித்து வந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க வேண்டும், ஒரு கட்டு ரூ 30 முதல் 50 வரை விற்கலாம், ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 10 கட்டு விற்றால் கூட சராசரியாக ரூ 300 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம், மாதத்திற்கு என்று சராசரியாக பார்க்கும் போது பிரண்டை விற்பதன் மூல ரூ 8000 க்கு குறைவில்லாமல் வருமானம் பார்க்க முடியும்.

சரி இந்த பிரண்டையை என்ன தான் செய்ய முடியும் என கேட்டால் துவையல் போல வைத்து ரசத்திற்கு, புளிக்குழம்பிற்கு வைத்து சாப்பிடலாம்,பிரண்டையை குழம்பாகவும் வைத்து சாதம் வைத்து சாப்பிடலாம், பொங்கல் மற்றும் பிரண்டை துவையல் எல்லாம் வேற லெவல் காம்பினேசனாக இருக்கும், நல்ல மருத்துவ குணம் மிக்க பிரண்டைக்கு தற்காலத்தில் கூட நல்ல சந்தை மதிப்பு இருக்க தான் செய்கிறது.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas