Photography Services at Tourist Destinations - சுற்றுலா தளங்களில் போட்டோகிராபி எடுப்பதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக ஒரு போட்டோ என்பது பல நினைவலைகளை ஏற்படுத்தும், ஒரு சந்ததியை நினைவு வைத்துக் கொள்ள உதவும், பல நியாபகங்களை கண்ணுக்குள் கொண்டு வரும், அது தான் மொபைல் இருக்கே என்றால் வருடத்திற்கு ஒரு மொபைல் மாற்றுகிறோம், நாளை அந்த மொபைல் இருக்குமோ இருக்காதோ என்னும் போது அந்த போட்டோ அந்த மொபைலோடு அழிந்து விடுகிறது.
ஆனால் கையில் ஹார்டு காபியாக இருந்தால், அதை ப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி வைத்தால் தலைமுறைகள் கடந்தும் கூட நிலைக்கும், அந்த வகையில் போட்டோகிராபி என்பதற்கு சந்தைகளில் நல்ல மதிப்பு இருக்கிறது, அதிலும் சுற்றுலா தளங்களில் எல்லாம் எப்போதாவது ஒரு முறை அங்கு வருபவர்கள் தங்கள் நினைவுகளை புகைப்படமாக எடுத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள்.
அந்த வகையில் உங்கள் கைகளில் ஒரு நல்ல கேமராவும், கலர் பிரிண்டரும் இருந்தால் நீங்களும் சுற்றுலா தளங்களில் போட்டோ கிராபர் ஆகலாம், வெறும் கையில் கேமரா மட்டும் இருந்தால் போட்டோகிராபர் ஆகி விட முடியாது, போட்டோ என்பதும் ஒரு வித கலைநயம் தான், அந்த வகையில் சிறப்பாக போட்டோ எடுக்க தெரிந்தால் சுற்றுலா பயணிகள் உங்களிடம் அதிக புகைப்படங்களை புக்கிங் செய்வார்கள்.
பொதுவாக ஒரு கலர் புகைப்படம் எடுக்க அதன் அளவை பொருத்து ரூ 50 முதல் 150 வரை வசூலிக்கப்படுகிறது, ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 30 முதல் 40 புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டினால் கூட தினசரி 2000 ரூபாய் வரை வருமானம் பார்த்து விடலாம், மாதத்திற்கு சராசரியாக ஏற்ற இறக்கம் எல்லாம் போக குறைந்தபட்சம் ரூ 45,000 வரை வருமானம் பார்க்க முடியும்.