Pani Puri Stall Ideas Tamil - ஒரு சிறிய பானி பூரி ஸ்டால் வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பானி பூரி கடை, இன்று தமிழகம் முழுக்க எல்லா தெருக்களிலும் இன்று பார்க்க முடிகிறது, வட மாநிலத்தில் இருந்து வந்த ஒரு ஸ்நாக்ஸ், உணவு வகை என்றாலும் கூட தமிழகத்திலும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, பெரிய முதலீடும் தேவை இல்லை என்பதால் பலரும் இதை தொழிலாக முன்னெடுக்க முயற்சிக்கின்றனர், கிட்டத்தட்ட இந்த தொழில் ஐடியா என்பது ஒரு நல்ல தொழில் முடிவும் கூட தான்.
தள்ளு வண்டி கடையோ, சிறு கூடையோ இல்லையேல் ஒரு கண்டெய்னர் வாங்கி அதில் கடை செட்டப் செய்தாலோ எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம், உங்கள் முதலீடு அதிகமாக இருந்தால் இரு கண்டெய்னர் செட்டப் வாங்கி கொஞ்சம் கிராண்டாக முன்னெடுக்கலாம், நிச்சயம் உங்கள் முதலீட்டை ஒரு 6 மாதத்திலேயே இந்த பானி பூரி ஸ்டால் திரும்ப தந்து விடும், அதனால் ஐயப்பட வேண்டாம்.
வெறும் பானி பூரியை சுட்டு விற்றால் மட்டும் விற்பனையை பெருக்கி விட முடியாது, அதற்கான ரசம், மசாலாக்கள் மற்றும் அதன் சுவை தான் உங்கள் விற்பனையையும் வாடிக்கையாளர்களையும் உங்கள் ஸ்டாலுக்கு நிரந்தரமாக வர வைக்கும், அதனால் உங்கள் தினசரி முதலீட்டில் கொஞ்சம் அதிகமாகவே சுவைக்கு ஆக மெனக்கெடுங்கள்.
முக்கியமாக கடையோ ஸ்டாலோ மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் வைப்பது மிக மிக அவசியம், நீங்கள் சுவைக்காக மெனெக்கெட்டால் வாடிக்கையாளர்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கடைக்கு வர மெனக்கெடுவார்கள், முறையாக ஆவணப்படுத்திக் கொண்டால் ஸ்விக்கி, சொமட்டோவில் கூட உங்கள் ஸ்டால்களை கடைகளை இணைத்து டெலிவரி செய்யலாம்.
" நீங்கள் டெலிவரி நிறுவனத்துடன் இணைக்காமலே ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை அணுக முடிந்தால் தினசரி ரூ 2500 வரை வருமானம் பார்க்கலாம், டெலிவரி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டால் இன்னும் இந்த வருமானத்தை அதிகப்படுத்த முடியும் "