Orange Juice Shop Ideas Tamil - சிறிய ஆரஞ்ச் ஜூஸ் ஷாப் கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Orange Juice Shop Ideas Tamil - இயற்கையான ஆரஞ்சில் நாம் உண்ணும் உணவில் இல்லாத பல சத்துக்கள் இருக்கின்றன, பொதுவாக நாம் எந்த பிரச்சினைக்கு மருத்துவர்களை அணுகினாலும், ஆரஞ்ச் ஜூஸ் போட்டு குடிங்க, என கடைசியில் ஒரு வார்த்தை சொல்லி தான் மருத்துவர் அனுப்புவார், அந்த அளவிற்கு ஆரஞ்ச் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.
சரி இந்த ஆரஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்து ஜூஸ் கடை வைக்கலாமா எனக் கேட்டால் தாராளமாக வைக்கலாம், பொதுவாக ஒரு ஆரஞ்ச் ஜூஸ் சந்தைகளில் ரூ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது, 3 ஆரஞ்ச்கள் சேர்ந்து பிழிந்தால் ஒரு ஆரஞ்ச் ஜூஸ் தாராளமாக எடுக்க முடியும், ஒரு கிலோ நீங்கள் மொத்த விலைக்கு வாங்கும் போது ரூ 60 முதல் 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்ய முடியும்.
அந்த வகையில் ஒரு கிலோவில் இரண்டு ஆரஞ்ச் ஜூஸ்கள் என வைத்துக் கொண்டால், 1 கிலோவிற்கு ரூ 30 முதல் 40 வரை இலாபம் இருக்கும், ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 ஜூஸ், அதாவது 15 கிலோ முதல் 20 கிலோ ஆரஞ்ச் வரை ஓட்டினால், சராசரியாக மாதம் ரூ 20,000 இலாபமாக கையில் எடுக்கலாம், இதில் முக்கியமாக கடை நல்ல சந்தைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அமைக்க வேண்டும்,
தள்ளுவண்டியிலும் கூட ஒரு சிலர் ஆரஞ்ச் ஜூஸ் கடைகள் வைத்து இருக்கிறார்கள், நீங்கள் ஒரு கடை எடுத்து தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, புழிவதற்கு மெசினரிகள் எல்லாம் எளிதான விலையில் கடைகளில் கிடைக்கின்றன, ஒரு 5000 ரூபாய் முதலீடு செய்தாலே போதும் ஒரு ஆரஞ்ச் கடையை ஆரம்பித்து இலாபகரமானதாக மாற்றி விடலாம்.