Nerunji Powder Making Ideas - நெருஞ்சி பவுடர் தயாரிப்பில் ஈடுபட்டு எவ்வாறு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் நெருஞ்சி பவுடர் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான தேவை ஏன், அதற்கான சந்தை என்ன என்பது குறித்து முதலில் அறிய வேண்டியது அவசியம் ஆகிறது, நெருஞ்சி என்பது அந்த காலக்கட்டத்தில் சிறுநீரகம் மற்றும் அது சம்மந்தமான நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
சிறுநீரக கற்கள் மற்றும் ஏனைய சில சிறுநீரக பிரச்சினைகள், செரிமான பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நீக்குவதில் நெருஞ்சி என்பது முக்கியந்துவம் வாய்ந்ததாக அமைகிறது, அந்த வகையில் நெருஞ்சி பவுடர் என்பதற்கு மருத்துவ சந்தையில் நல்ல மார்க்கெட் இருக்கிறது, சரி இந்த நெருஞ்சி எங்கு கிடைக்கும் என்றால் முள் காடுகள், வயல் வெளிகள், மேச்சல் நிலங்களில் சாதாரணமாக கிடக்கும்.
காய்ந்த நெருஞ்சி முள்ளையோ நெருஞ்சி இலையையோ பறித்து வந்து நன்கு நிழலில் உலர்த்தி பொடியாக்கி கொள்ள வேண்டும், நீங்கள் சிறிய அளவில் உங்கள் ஊருக்குள் மட்டும் செய்ய பொகிறீர்கள் என்றால் ஆவணங்கள் ஏதும் தேவை இல்லை, ஆனாலும் ஊருக்குள் மட்டும் சந்தைப்படுத்தும் போது அதிக வாடிக்கையாளர்களிடம் தயாரிப்பை கொண்டு சேர்ப்பதும், சந்தைப்படுத்துவதும் கடினம்.
அந்த வகையில் முறையாக மருந்து கட்டுப்பாடு நிறுவனத்திடம் முறையாக பதிவு செய்து ஈ காமர்ஸ் தளங்கலிலும் சந்தைப்படுத்தும் போது நல்ல மார்க்கெட்டும் இருக்கும், இலாபமும் அதிகமாக பெறலாம், 100 கிராம் 100 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, ஒரு மாதத்திற்கு 15 முதல் 20 கிலோ சந்தைப்படுத்தினால் கூட ரூ 15,000 முதல் 20,000 வரை வருமானம் பார்க்கலாம்.