Marikolunthu Planting Business - மரிக்கொழுந்து வளர்ப்பில் ஈடுபட்டு எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
மரிக்கொழுந்து வளர்ப்பில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான தேவை என்ன இருக்கிறது என்பது குறித்து முதலில் பார்க்க வேண்டும், பொதுவாக மரிக்கொழுந்து என்பது மாலைகள், பூ சரங்கள், பூங்கொத்துகள் தயாரிப்பில் பெருமளவில் பங்கு வகிக்கிறது, அது மட்டும் அல்லாமல் மரிக்கொழுந்து வாசனை திரவியம் தயாரிப்பிலும், ஒரு சில மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மரிக்கொழுந்திற்கான மார்க்கெட் என்பது நன்றாகவே இருப்பதை அறிய முடியும், ஆனால் மரிக்கொழுந்து தயாரிப்பில் ஈடுபடும் போது உங்களது மார்க்கெட்டை பூ கடைகளை மட்டும் டார்கெட்டாக வைக்காமல், திரவியம், மருந்து பொருட்கள், மரிக்கொழுந்து ஆயில் உள்ளிட்ட சந்தைகளிலும் விரிவுபடுத்த வேண்டும், அவ்வாறு செய்தால் மட்டும் இந்த மரிக்கொழுந்தின் மூலம் அதிக வருமானம் பார்க்க முடியும்.
சரி முதலில் மரிக்கொழுந்து விதைகளை வேளாண் சந்தைகள் அல்லது வேளாண் கல்லூரிகளில் வாங்கிக் கொள்ள வேண்டும், தரமான விதைகளை வாங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், மரிக்கொழுந்து விதை என்பது சற்றே மார்க்கெட்டில் அதிக விலை தான், ஒரு 1000 ரூபாய் கொடுத்து அதற்கு தரும் விதைகளை வாங்கி பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
தோட்டம் இருந்தால் அதில் மண்களை மண்வெட்டி வைத்து கொஞ்சம் கிளறி விதைகளை விதைத்து தேங்காய் நார், காய்ந்த சாணி உரங்களை தெளிக்கலாம், கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் நவபாசான உரங்களை நீரில் கலந்து தெளித்தால் பூச்சுகள் அண்டாது, 30 முதல் 45 நாட்களிலேயே இலை அதிகமாக தளிர் விட ஆரம்பித்து விடும், ஒரு 50 நாட்களில் இலைகளை பறிக்க ஆரம்பித்து விடலாம்.
" பறித்த இலைகளை ஒரே ஒரு சந்தையை மட்டும் நம்பி சந்தைப்படுத்தாமல் பல்வேறு துறை சார்ந்த சந்தைகளில் சந்தைப்படுத்தினால் மாதம் ரூ 50,000 வரை வருமானம் பார்க்கலாம், இலை காய்ந்தாலும் அதை அரைத்து பொடியாக்கி ஆயுர்வேத மருந்து கடைகளுக்கு கொடுக்கலாம் "