Zendu Flower Planting - செண்டு பூ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் செண்டு பூ வளர்ப்பு ஏன் அதனால் நல்ல வருமானம் இருக்குமா, அதன் சந்தை மதிப்பு என்ன என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக செண்டு பூ ஆனது மாலை, பூ சரங்கள், பூங்கொத்துகள், காஸ்மெட்டிக்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேரி கோல்டு என்று அழைக்கப்படும் செண்டு பூவின் உலகளாவிய மார்க்கெட் மதிப்பு என்பது 157.87 மில்லியன் டாலராக இருக்கிறது.
வருகின்ற 2030 யில் செண்டு பூவின் மார்க்கெட் மதிப்பு 242.13 அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில் செண்டு பூ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்ட முடியும் என்பது இதன் மூலம் விளங்கி இருக்கும், சரி செண்டு பூவை எப்படி வளர்க்கலாம் எங்கு சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் விதைகளை வேளாண் கடைகள், வேளாண் கல்லூரிகள் அல்லது ஆன்லைனிலும் கூட கொள்முதல் செய்யலாம், 1000 விதைகளே 100 ரூபாய் மதிப்பில் தான் கிடைக்கும், தரத்தையும் பூவின் கலரையும் பொறுத்து விலை இருக்கலாம், தோட்டம் இருக்கும் பட்சத்தில் அதை உழுது, கொஞ்சம் நவபாசன உரக் கலவை தெளித்து விதையை பயிரிடலாம்.
50 முதல் 80 நாட்களில் விதையின் தன்மையை பொறுத்து அறுவடை செய்யலாம், பின்னர் அறுவடை செய்த பூவை நேரடியாக பூ வியாபாரிகளுக்கு கொண்டு சேர்க்கலாம் அல்லது பூவை மொத்தமாக வாங்கும் ஏஜென்சிகளுக்கு கொண்டு போடலாம், ஒரு கிலோ செண்டு பூ ஆனது அதன் தரம் மற்றும் கலரை பொறுத்து ரூ 40 முதல் 180 வரை சந்தைகளில் விற்கலாம்.
" பூ மார்க்கெட்டை மட்டும் விடுத்து காஸ்மெட்டிக்ஸ், பாராமெச்சுட்டிகல்ஸ், பூங்கொத்து தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தினால் மாதம் ரூ 30,000 க்கு குறையாமல் சம்பாதிக்க முடியும் "