Kuzhal Puttu Kadai Ideas - சிறிய குழல் புட்டு கடை வைப்பதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
குழல் புட்டு என்பது அந்த காலக்கட்டத்தில் பலரின் மிக மிக விருப்ப உணவாக இருக்கும், தற்போது பெருகி வரும் அந்நிய கலாச்சார உணவுகளால் குழல் புட்டுகளை எல்லாம் தற்போது வீடுகளிலும் சரி ஹோட்டல்களிலும் சரி பார்க்க முடிவதில்லை, ஆனால் தற்போது மீண்டும் ஒரு சில தள்ளுவண்டி கடைகளில் அதிகாலை முதலே குழல் புட்டு விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது.
மக்களும் கூட்டம் கூட்டமாக வாங்கி செல்கின்றனர், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகின்றனர், அந்த வகையில் ஒரு குட்டி குழல் புட்டு கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், முதல் குழல் புட்டு அவிப்பதற்கான பாத்திர பண்டங்களை பாத்திர கடைகளில் வாங்கி கொள்ளவும், ஒரு 3 குழல் புட்டு சட்டி ஆவது வாங்கி கொள்வது நல்லது.
ஒரு தள்ளு வண்டி அதுவும் நல்ல மக்கள் கூடும் பகுதிகளில், மார்க்கெட் அருகில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும், அரிசி மாவு, சம்பா மாவு, கம்ப மாவு என மாவுகளை கடைகளில் வாங்காமல் அரிசி, சம்பா, கம்பு உள்ளிட்டவைகளை மில்களில் கொடுத்து இடித்துக் கொள்ளலாம், கடைகளில் விற்கப்படும் மாவுகளில் கலப்படம் இருக்கலாம்.
காலை 6 மணிக்கு கடையை துவங்கி புட்டுகளை அவிக்க ஆரம்பித்து விட வேண்டும், பொதுவாக புட்டுகளுக்கு ஒரு சிலர் குருமாவும் ஒரு சிலர் தேங்காய் பூ, நாட்டுச்சர்க்கரை போட்டும் சாப்பிடுவார்கள் அவர்களுக்கு ஏற்ப இரண்டையும் வைத்துக் கொள்வது நல்லது, ஒரு புட்டு 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 புட்டுகள் விற்றால் கூட தினசரி 1000 ரூபாய்க்கு மேல் வருமானம் பார்க்கலாம்.