Kumkuma Making Business - குங்குமம் தயாரிப்பில் ஈடுபட்டு எப்படி ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் குங்குமத்திற்கான சந்தை என்பதை இந்தியா முழுக்க இருக்கிறது என்றே சொல்லலாம், கோவில்கள், திருமணம் ஆன பெண்கள், பூஜை சாமான் கடைகள் என்ற மூன்று தான் குங்குமத்திற்கான மார்க்கெட், பொதுவாக சந்தைகளில் கிடைக்கும் குங்குமங்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதில்லை, அதில் கலர்ஸ் மற்றும் கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது.
ஏன் என்று கேட்டால் இயற்கையான முறையில் தயாரித்து சந்தைப்படுத்தினால், அதில் இலாபம் என்பது கம்மி, அதே சமயத்தில் கெமிக்கல்கள் மூலம் தயாரிக்கும் போது இலாபம் பன்மடங்கு அதிகம், ஆனால் தற்போதெல்லாம் மக்கள் மலிவு விலை என்பதை விட தரத்தை உற்று நோக்க ஆரம்பித்து விட்டார்கள், அந்த வகையில் இயற்கையான குங்குமத்திற்கு என்று ஒரு மவுசு இருக்க தான் செய்யும்.
சரி முதலில் குங்குமம் தயாரிக்க என்ன என்ன தேவை என்றால் விரலி கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், ரோஸ் வாட்டர், தேவைப்பட்டால் கொஞ்சம் நெய் உள்ளிட்டவைகளை முதலில் மொத்த விலையில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், முதலில் விரலி மஞ்சளை கொஞ்சம் அரை குறையாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும், மாவாக அரைத்தாலும் சரி தான்.
எவ்வளவு விரலி மஞ்சள் சேர்க்கிறோமோ அதில் 1/4 பங்கு படிகாரமும், வெண்காரமும் நன்கு இடித்து சேர்க்க வேண்டும், பின்னர் கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு வாரத்திற்காவது நன்கு காய வைக்க வேண்டும், முதலில் மஞ்சளாக தெரியும் காய்ந்ததும் சிகப்பு கொடுக்கும், கொஞ்சம் நெய் சேர்த்து தேவைப்பட்டால் பிசைந்து கொள்ளலாம், அது ஒட்டும் தன்மை கொடுக்கும்.
" சந்தைகளில் ஒரு கிலோ இயற்கையான குங்குமத்தின் மதிப்பு ரூ 1000 வரை விற்கப்படுகிறது, சிமிழ்கள், பாக்கெட்டுகள் போட்டு பூஜை சாமான் கடைகளுக்கும், கோவில்களுக்கும் மட்டும் சந்தைப்படுத்தினால் கூட மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம் ”