Koozh Vadagam Making Business Ideas - பொதுவாக வடகம் என்பது சாப்பாட்டிற்கு சிறந்த ஒரு கூட்டு பொருள் ஆகும், பலரும் சாப்பாட்டிற்கு கூட்டு ஏதும் இல்லாத போது வடகத்தை துணை கூட்டு போல பயன்படுத்துக் கொள்வார்கள், பொதுவாக சந்தைகளில் பல்வேறு அப்பள வகைகள் வந்தாலும் கூட கூழ் வடகம் வெங்காய வடகம் போன்றவைகளுக்கு இன்னும் சந்தைகளில் மதிப்பு என்பது இருக்க தான் செய்கிறது.
வடகம் தயாரிப்பது என்பது எளிமையான விடயம் தான், பொதுவாக அந்த காலத்தில் புழுங்கல் அரிசியை நனைய போட்டு அரைத்து, அதை தண்ணீர் ஊற்றி நன்கு காய்க்க வேண்டும், நன்கு தண்ணீராக காய்த்து அதில் கொஞ்சம் சீரகம்,உப்பு இது போக மிளகாய் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம், உங்களுக்கு ஏற்ற Flavour களை காய்க்கும் போது தான் போட வேண்டும்.
நன்கு காய்த்து ஆறியதும், அதை வீட்டில் ஏதும் வேஷ்டிகள் இருந்தால் அதை விரித்து, காய்த்த அந்த அரிசி கஞ்சை கரண்டி வைத்து மெலிசாக ஊற்றி ஊற்றி நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும், நன்கு காய்ந்த பின்னர் கொஞ்சம் தண்ணீர் தெளித்து எடுத்து வடகமாக பயன்படுத்திக் கொள்ளலாம், ஒரு சிலர் மீஞ்சி போன பழைய கஞ்சியை அரைத்து அதை அப்படியே காய வைத்தும் வடகம் செய்வார்கள்.
இன்னும் சிலர் முன்னதாகவே புழுங்கல் அரிசியை திரித்து வைத்துக் கொண்டு அதை நேரடியாக காய்த்தும், வடகம் செய்வார்கள், மிளகு வடகம், இஞ்சி வடகம், சீரக வடகம், உரைப்பு வடகம் என பல சுவைகளில் செய்யலாம், நீங்கள் காய்க்கும் போது என்ன Flavor சேர்க்கிறீர்களோ, அது காயும் போது அந்த சுவையைத் தரும், பொதுவாக அதை 10 ரூபாய் பாக்கெட்டுகளாக போடும் போது நல்ல இலாபம் கிடைக்கும்.
" தனி ஆளாக செய்கிறீர்கள் என்றால் ஒரு குறிபிட்ட சந்தையில் வடகத்தை சந்தைப்படுத்துவதன் மூலம் மாதம் ரூ 15000 வரை வருமானம் பார்க்க முடியும், பேக்கிங் மெசின்கள் எல்லாம் வைத்து செய்தால், அதிக அளவில் பேக்கிங் செய்து வியாபாரத்தையும் வருமானத்தையும் இன்னும் பெருக்கலாம் "