Kodukkapuli Selling Ideas - கொடுக்காபுளியை விற்பனை செய்து எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக கொடுக்காபுளி என்பது ஒரு புளி வகையைச் சார்ந்த ஒரு மரம், இது ஒரு பழ வகை என சந்தைகளில் விற்கப்படுகிறது, இதில் வைட்டமின் B1, B2, E அதிகமாக நிறைந்து இருக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொடுக்காபுளி பெரிதும் உதவுகிறது, இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை மன அழுத்தத்தை குறைக்கும் எனவும் கூறுகின்றனர்.
சரி தற்போது என்ன கொடுக்காபுளிக்கான தேவை என்றால், மக்கள் தற்போது பழைய விடயங்களை அதிலும் ஆரோக்கியமான விடயங்களை தேட ஆரம்பித்து விட்டனர், அந்த வகையில் சாலையோரங்களில் விற்கும் கொடுக்காபுளி, கொய்யா, நெல்லிக்காய், மாங்காய் என்று இயற்கையாக தோட்டங்களில் வளரும் விடயங்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்,
பெரும்பாலும் தென் தமிழகத்தில் தான் கொடுக்காபுளி ஆனது அதிகம் விளைகிறது, தோட்டம் வைத்து இருக்கும் ஆட்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம், நீங்கள் தினசரி வாங்குகிறீர்கள் என்றால் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் உங்களுக்கு அவர்கள் தருவார்கள், சந்தைகளில் கொடுக்காபுளி கால் கிலோ ஆனது 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பைபாஸ் சாலையோரத்தில் ஏதேனும் மரத்தின் அடியில் அல்லது டோல்கேட் அருகில் என ஒரு சிறிய ஸ்டால் அமைத்து கொடுக்காப்புளி பரப்பி போட்டு விற்பனை செய்யலாம், அந்த வழியாக பயணிப்பவர்கள் வாகனத்தை நிறுத்தி வாங்கி செல்வார்கள், தினசரி ஒரு 5 கிலோ முதல் 7 கிலோ அளவில் சந்தைப்படுத்தினால் கூட ஒரு நாளுக்கு ரூ 1000 முதல் 1500 வரை வருமானம் பார்த்து விடலாம்.