Keelanelli Powder Making - கீழா நெல்லி பொடி தயாரிப்பில் ஈடுபடுவதன் மூலம் எப்படி ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
கீழா நெல்லி பொடி என்பது ஏன் தேவைப்படுகிறது, அதற்கு எந்த துறையில் மார்க்கெட் இருக்கிறது என்றால் கீழா நெல்லி பொடி என்பது மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு பொடி, மஞ்சல் காமாலை, கல்லீரல் பிரச்சினைகளில் இருந்து முழுவதுமாக விடுபட கீழா நெல்லி ஒரு சிறந்த மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் சித்தாக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பில்லாந்தஸ் நிரூரி என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த கீழா நெல்லி பொதுவாகவே வெட்ட வெளிகளில், காட்டுப்பகுதிகளில், விளைச்சல் நிலங்களில் எளிதாக தென்படும், அதன் இலைகளை எவ்வளவு பறிக்க முடியுமோ பறித்து முதலில் வெயில் வராத பகுதிகளில் அதே சமயத்தில் ரொம்ப குளிரும் அல்லாத நிழலில் நன்கு காய வைக்க வேண்டும்,
பின்னர் ஒரு வாரம் கழித்து காய வைத்த அந்த இலைகளை நன்கு பொடியாக்கி பாட்டிலிலோ அல்லது பாக்கெட்டுகள் போட்டோ விற்கலாம், பொதுவாக 50 கிராம் கீழா நெல்லி பொடி என்பது சந்தைகளில் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது, ஆயுர்வேத கடைகள், சித்தா மருந்து கடைகளில் மொத்தமாக கொடுக்கலாம், சில்லறைக்கும் கொடுக்கலாம்.
முறையாக மருத்துவ ரீதியாக ரிஜிஸ்டர் செய்தும் விற்பனை செய்யலாம், மருந்து பொருள்களை ஈ காமர்ஸ் உள்ளிட்ட தளங்களின் மூலம் விற்பனைக்கு அணுகும் போது நிச்சய்மாக மாநில மருத்துவ துறைகளிடம் முறையாக லைசென்ஸ் பெற்று இருக்க வேண்டும், அவ்வாறு பெற்று இருக்கும் பட்சத்தில் ஈ காமர்ஸ் மூலம் சந்தைப்படுத்தி விற்பனையை அதிகரிக்கலாம்.
" ஒரு குறிப்பிட்ட சந்தைகள் மற்றும் ஆயுர்வேத கடைகள் மட்டும் கையில் வைத்துக் கொண்டு அவர்களின் மூலம் சந்தைப்படுத்தினால் மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம், ஈ காமர்ஸ்சையும் கையில் எடுத்தால் இன்னும் வருமானத்தை அதிகரிக்க முடியும் "