Jackfruit Selling Ideas - ஒரு சிறிய பலா பழம் கடை வைத்து எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
பலா பழம் என்பது பொதுவாகவே அனைவருக்கும் விருப்பமான பழம் ஆக இருக்கும், நல்ல சத்து மிக்க உடலுக்கு நல்ல பலத்தையும் தரக்கூடியது என்பதால் மக்கள் தற்போது விரும்பி சாப்பிட ஆரம்பிக்கிறார்கள், பெரும்பாலும் பழக்கடைகளில் பலா பழம் என்பது எப்போதும் இருப்பதில்லை, அதே சமயத்தில் சாலையோரங்களில் இருக்கும் ஸ்டால்களில் கிடைக்கிறது.
வாகனங்கள் நிற்கும் வசதியுடன் கூடிய நம்ம மெயின் ஆன சாலை பலா பழ ஸ்டால் அமைப்பதற்கு சரியான இடமாக இருக்கும், சரி பலா பழங்களை எங்கு கொள்முதல் செய்வது என்றால் பன்ருட்டி பகுதிகளில் மொத்த விலையில் பலா பழங்களை கொள்முதல் செய்யலாம், சீசனை பொறுத்து கிலோ ரூ 60 முதல் 120 வரை மொத்தவிலைக்கு விற்பார்கள்.
நீங்கள் பலாவை உறித்து விற்கும் போது கால் கிலோ 50 ரூபாய் வரை விற்கலாம், பொதுவாக சாலையோர ஸ்டால்களில் அவ்வாறாகவே விற்கப்படும், அந்த வகையில் ஒரு நாள் ஒன்றுக்கு 5 கிலோ முதல் 7 கிலோ வரை பலா பழங்களை சந்தைப்படுத்தினால் கூட தினசரி ரூ 1000 முதல் 1400 வரை வருமானம் பார்க்க முடியும், தினசரி நீங்கள் விற்கும் அளவை பொருத்து உங்கள் வருமானம் அமையும்.
சரியான பலா வியாபாரியை கையில் வைத்துக் கொண்டால் அவர் நேரடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு கூட ஆர்டர்களை போட்டு விட்டு விடுவார், உங்களால் விற்க முடியும் அளவிற்கு கொள்முதல் செய்து வைத்துக் கொள்வது நல்லது, இரண்டு மூன்று இடங்களில் வைத்து விற்பனை செய்தால் ஒரு நாளுக்கு 10 கிலோ வரையிலும் கூட சந்தைப்படுத்த முடியும், வருமானமும் அதிகமாக ஈட்ட முடியும்.