Guava Leaf Powder Making - சிறிய முதலீட்டில் கொய்யா இலை பவுடர் தயாரிப்பதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் கொய்யா இலை பவுடர் என்பது எதற்காக தேவை, ஏன் தேவை என்பது குறித்து முதலில் பார்க்கலாம், கொய்யா இலை பவுடர் என்பது நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தப்பட கூடிய ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்தாக பார்க்கப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறை கொய்யை இலை பொடியை கொஞ்சம் தேன் கலந்தோ அல்லது வெந்நீரிலோ போட்டு குடித்தால் நீரிழிவு நோயை அறவே குறைக்கலாம்.
சரி, அந்த வகையில் கொய்யா இலை பொடிக்கான மார்க்கெட் என்பது மிகப்பெரிய அளவில் இருப்பதை உணரலாம், காரணம் இன்று வீட்டிற்கு வீடு நீரிழிவு நோய் என்பது சாதாரணம் ஆகி விட்டது, சரி முதலில் இந்த கொய்யா இலை பொடியை எப்படி தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம், முதலில் கொய்யா இலைகளை பறித்து அதை நிழலில் மூன்று நாட்களுக்கு உலர வைக்க வேண்டும்.
பின்பு அதை நன்கு மில்லில் கொடுத்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும், அதை நீங்கள் பாக்கெட் போட்டு 250 கிராம் 100 ரூபாய்க்கு கொடுக்கலாம், முறையாக அரசின் மருந்து கட்டுப்பாடு நிறுவனங்களிடம் ஆவணப்பதிவு செய்து கொண்டு விற்கும் பட்சத்தில் உங்களால் ஈ காமர்ஸ் மூலமும் விற்க முடியும், ஆன்லைனில் 250 கிராம் கொய்யா இலை பொடி 300 ரூபாய் வரை விற்கிறார்கள்.
அந்த வகையில் ஆன்லைனில் விற்கும் போது ஆப்லைனை விட மூன்று மடங்கு வருமானம் பார்க்க முடியும், ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 3 பாக்கெட்டுகள் ஆப்லைனிலும் அல்லது இரண்டு பாக்கெட்டுகள் ஈ காமர்ஸ் தளங்களிலும் விற்றால் கூட ரூ 700 முதல் 1000 வரை வருமானம் ஈட்டலாம், மாதத்திற்கு என்று பார்க்கும் போது சராசரியாக 20,000 ரூபாய் வரை கொய்யா இலை பொடியில் வருமானம் பார்த்து விடலாம்.