Covering Shop Ideas Tamil - ஒரு சிறிய கவரிங் கடை வைப்பதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சரி முதலில் இந்த கவரிங் கடைக்கு ஏன் மார்க்கெட் இருக்கிறது என்பது குறித்து முதலில் பார்க்கலாம், தற்போது தங்கம் இருக்கும் விலைக்கு எல்லோரும் தங்கம் வாங்கி போட முடியுமா என்பது தெரியாது, அதே சமயத்தில் ஒரு சில தங்க நகைகள் அவர்களின் வசம் இருந்தாலும் கூட, இன்னும் கழுத்து நிறைய நகைகள் போட வேண்டும் என ஒரு சிலர் ஆசை கொள்வார்கள்.
கழுத்து நிறைய கை நிறைய நகைகள் போடுவது என்பது தற்போது எல்லாம் சாதாரணம் ஆகி விட்டது, ஒரு திருமணமோ அல்லது திருவிழாவோ நகைகள் இல்லாமல் போனால் நல்லா இருக்காது என தங்கம் இல்லாவிட்டால் கூட கவரிங் நகைகள் வாங்கி அணிகின்றனர், அந்த வகையில் கவரிங் நகைக்கான மார்க்கெட் என்பது நன்றாகவே இருக்கிறது.
சரி கவரிங் நகைகளை எங்கு மொத்தமாக கொள்முதல் செய்யலாம் என்றால் முக்கியமாக வட இந்தியாவில் தான், உங்களுக்கு யாரையேனும் அங்கு தெரியுமானால் நேரடியாக கவரிங் தயாரிப்பு மையம் அல்லது கவரிங் மொத்த விற்பனை மையம் சென்று, முதல் கொள்முதல் மட்டும் கையோடு வாங்கி வந்து, அதற்கு பின்னர் ஆர்டர் தேவைப்பட்டால் மொபைல்களில் பேசி ஆர்டர்கள் சொல்லலாம்,
பொதுவாக ஒரு கவரிங் நகை விற்கும் போது 100 சதவிகிதத்திற்கு 100 சதவிகிதம் அல்லது அதற்கு மேலும் கூட இலாபம் இருக்கும், கிட்டத்தட்ட ஒரு நட்டமே இல்லாத தொழில், கடை நிச்சயம், நல்ல மக்கள் கூடும் இடத்தில் சந்தைப்பகுதிகளில் மட்டும் அமைந்து விட்டால் எப்படி குறைந்தபட்சம் மாதம் ரூ 40,000 வரை வருமானம் பார்த்து விடலாம் என்பதில் ஐயமில்லை.