• India
```

நெய் தீபம் தயாரிப்பு...குறைந்த முதலீடு போதும்...மாதம் ரூ 30000 வரை வருமானம்...!

Nei Deepam Making Business Ideas

By Ramesh

Published on:  2025-01-16 16:56:00  |    261

Nei Deepam Making Business Ideas - பொதுவாக நெய் தீபம் என்பது வீடுகளிலும் கோவில்களிலும் ஒரு வித பக்தி உணர்வுகளுக்காக ஏற்றப்படும் ஒரு விளக்காக பார்க்கப்படுகிறது, நெய் தீபம் குறித்து ஒரு வித சம்பிரதாயங்களும் உண்டு, கடவுள்களுக்கு 11 தீபம், 21 தீபம் ஏற்றினால் நினைத்தது நடக்கும் என்ற ஐவீகம் எல்லாம் உண்டு, அந்த வகையில் நெய் தீபத்திற்கான தேவை என்பது தினம் தினம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் நெய் தீபம் தயாரிப்பில் எவ்வாறு ஈடுபடுவது, அதை எப்படி துவங்குவது என்பது குறித்து முதலில் பார்க்கலாம், முதலில் நெய் தீபத்திற்கு நெய் தான் முதன்மையான பொருள், நெய்யை மொத்த விலைக்கு வாங்கி கொள்முதல் செய்து கொள்வது அவசியம், அதற்கு பின்னர் மவுல்டுகள், ஸ்டீயரிக் ஆசிட் உள்ளிட்டவைகள் தயாரிப்பிற்கு மூலப்பொருள்களாக தேவைப்படும்,



முதலில் 1 லிட்டர் நெய்யை மெல்ல உருக்கி, அதனுள் ஒரு 50 மிலி ஸ்டீயரிக் ஆசிட் சேர்த்து பின்னர் மவுல்டுகளில் ஊற்ற வேண்டும், அறை வெப்பநிலையில் ஒரு அரை நாள் அதை காய வைத்தால், நல்ல வடிவான நெய் தீபம் உருவாகி விடும், ஸ்டீயரிக் ஆசிட் நெய்யின் கட்டித் தன்மையை மேம்படுத்தவும் விளக்கு ஏற்றினால் அது நின்று எறியவும் உதவிகரமாக அமையும்.

ஆனாலும் நீங்கள் எவ்வளவு நெய் சேர்க்கிறீர்களோ அந்த நெய்யில் 5% தான் ஸ்டீயரிக் ஆசிட் சேர்க்க வேண்டும், மவுல்டிற்கு பதில் மண் விளக்குகளும் மொத்த விலையில் வாங்கி வைத்துக் கொள்ளலாம், மொத்தமாக தயாரித்து பூஜை சாமான் கடைகளிலும், கோவில்கள், மொத்த விலை கடைகளுக்கும் சந்தைப்படுத்தினால் குறைந்தபட்சம் மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்.

" GST ரிஜிஸ்டர் செய்து, பக்காவான லேபல்கள், பேக்கிங்கள் செய்தால் 30 மண் நெய் தீபங்களை ரூ 500 வரை சந்தைப்படுத்த முடியும், ஈ காமர்ஸ் மூலமும் விற்பனையை துவங்கினால் இன்னும் வருமானத்தை அதிகப்படுத்தலாம் "