Fish Shop Ideas Tamil - சிறிய முதலீடுகள் மூலம் மீன் கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
மீன் கடையில் அவ்வளவு இலாபம் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்கும், அதுவும் மீன் கடையை பகுதி நேரம் வைத்துக் கொண்டு வேறு வேலைக்கும் கூட சென்று கொள்ளலாம், பொதுவாக மீன் கடைகளை காலை 7 மணிக்கு ஆரம்பித்து 12 மணிக்குள் முடித்து விடுவார்கள், அதிலும் செவ்வாய் வெள்ளி பெரும்பாலும் கடைகள் இயங்காது, வாரத்திற்கு 4 நாள்கள் உழைத்தால் போதும்,
சரி மீனை எங்கு கொள்முதல் செய்வது என்றால் இரண்டு முறையில் கொள்முதல் செய்யலாம், ஒன்று துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்வது, இல்லையென்றால் ஒன்றிரண்டு மீனவர்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களிடம் நேரடி கொள்முதல் செய்வது, பெரும்பாலும் இந்த இரண்டு கொள்முதலிலும் விலையில் வித்தியாசங்கள் இருக்காது,
சாலை மீன்கள் எல்லாம் 1000 சாலைகள் வெறும் 300 ரூபாய்க்கு கிடைக்கும், ஆனால் விற்கும் போது 10 ரூபாய்க்கு நான்கு சாலைகள் தான் கொடுப்பார்கள், அந்த வகையில் 5 மடங்கிற்கு மேல் இலாபம் இருக்கும், துண்டு மீன்களும் அப்படி தான், ஒரு பெரிய மீனை முழுதாக வாங்கி, அதை வெட்டி விற்கும் போது அதில் இருந்து குறைந்த பட்சம் 2 மடங்கு இலாபம் எடுத்து விடலாம்.
பொதுவாக மீனில் நட்டமே இல்லை, ஒரு நாளுக்கு விற்கவில்லை என்றால், அதை உப்புக்கண்டம் போட்டு காய வைத்து உலர்த்து கருவாடாக விற்று விடலாம், மாசி கருவாடு செய்து விற்கலாம், பாக்கெட்டுகள் போட்டு உணவு பாதுகாப்பு நிறுவனங்களிடம் அனுமதி வாங்கி ஏற்றுமதி கூட செய்யலாம், குறைந்த பட்சம் ஒரு கடை போட்டு தினசரி ஒரு 20 பேரை அணுக முடிந்தால் கூட மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்.