• India
```

போஸ்டல் கவர் தயாரிப்பு...சிறிய முதலீட்டில்...மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Envelope Making Business Ideas

By Ramesh

Published on:  2025-02-06 10:11:28  |    82

Envelope Making Business - போஸ்டல் கவர் தயாரிப்பு...சிறிய முதலீட்டில்...மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம்...!

முதலில் போஸ்டல் கவர் என்பது ஆவணமோ அல்லது ஏதேனும் டாகுமெண்டோ அல்லது லெட்டரோ எதாவது அனுப்புவதற்கு பயன்படும் ஒரு கவர் ஆக பார்க்கப்படுகிறது, சரி இதற்கு நல்ல மார்க்கெட் இருக்கிறதா என்றால் முன்பை விட குறைந்து இருக்கிறது தான் என்றாலும் கூட இன்னும் போஸ்டல் கவர் என்பது பல இடங்களில் பயன்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு வங்கிகள், அலுவலகங்கள், அரசு ஆபிஸ்கள் ஆகியன ஒரு சில முக்கிய ஆவணங்களை அனுப்புவதற்கும், ஒரு சில முக்கிய ஆவணங்களை பெறுவதற்கும் போஸ்டல் கவர்கள் மூலம் ஆக தான் பெறுகின்றன, அந்த வகையில் போஸ்டல் கவர்களை தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் நிச்சயம் பார்க்க முடியும்.



இந்த கவர்களுக்கான பேப்பர்கள் ரோல்களாக பல கலர்களில் மொத்த விலையில் கிடைக்கும், இதனை கட் செய்து கைகளிலும் போஸ்டல் கவர் செய்யலாம், மெசின்களும் சந்தைகளில் கிடைக்கிறது, அதுவே கட் செய்து, அதுவே ஒட்டியும் விடும், இந்த போஸ்டல் கவர் மேக்கிங் மெசின்களின் விலை ரூ 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை சந்தைகளில் இருக்கிறது.

முதலில் கைகளில் செய்து கொடுத்து அதற்கு பின்னர் வேண்டுமானால் கொஞ்சம் தொழில் டெவலப் ஆனதும் மெசின்கள் வாங்கி போட்டு அதிகப்படியான கவர் தயாரித்து சந்தைப்படுத்தலாம், ஒரு போஸ்டல் கவர் தயாரிக்க ஆகும் செலவு என்பது வெறும் 30 பைசா தான், அதை நீங்கள் மொத்த விலைக்கு 3 ரூபாய்க்கும், ரீட்டைலுக்கு 5 ரூபாய்க்கும் கொடுக்கலாம்.

" கைகளில் தயாரிக்கும் போது தயாரிப்பு என்பது ஒரு நாட்களுக்கு கம்மியாக தான் இருக்கும், அந்த வகையில் ஒவ்வொரு நாளும் தயாரித்து ஒரு குறிபிட்ட கவர்களை சந்தைப்படுத்தினால் மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம், மெசின்கள் வைத்து தொழிலில் ஈடுபட்டால் மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas