Egg Shell Powder Business Ideas - முட்டை ஓடு பவுடர் இதற்கு என்ன சந்தை மதிப்பு இருக்கிறது, வரும் காலத்தில் இதை தொழிலாக மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளாவிய அளவில் மிகப்பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளராக சீனா இருக்கிறது என்றால் அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது, இதில் இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான் மட்டுமே 16 மில்லியன் மெட்ரிக் டன் முட்டைகளை உற்பத்தி செய்கிறதாம், சீனா ஒட்டு மொத்த உலகளாவிய முட்டை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை தன்வசம் கொண்டு இருக்கிறது.
சரி ஏன் முட்டையை பற்றி பேசுகிறோம், முட்டை தொழிலா என்றால் இல்லை, முட்டை உடைத்து ஊற்றியதும் வேஸ்ட் என்று ஒரு ஓட்டை தூக்கி எறிவோமே, அதை வைத்து ஒரு தொழிலை உருவாக்க முடியுமா என்றால் ஆம் அது ஏற்கனவே உருவாகி விட்டது, முட்டை ஓட்டினை பவுடராக தயாரித்து சந்தைகளில் கிலோ 800 ரூபாய் வரையில் விற்று வருகிறார்கள் அது குறித்து பார்க்கலாம்.
சரி இந்த முட்டை ஓடு பவுடர் எதற்காக தேவை என்றால், இதில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் மனித உடலுக்கு மட்டும் அல்லாமல், வளர்ப்பு பிராணிகளுக்கும் சிறந்த சத்து மிக்க உணவு பொருளாக பார்க்கப்படுகிறது, விவசாயங்களுக்கும் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, முட்டை ஓட்டை வெந்நீரில் அலசி வெப்பத்தில் சுட்டு காய வைத்து அரைத்தால் முட்டை ஓடு பவுடர் ரெடி.
தற்போதைக்கு இந்த முட்டை ஓட்டு பவுடரின் சந்தை மதிப்பு என்பது உலகளாவிய அளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக தகவல், இன்னும் வரும் காலங்களில் இந்த முட்டை ஓட்டு பவுடர் என்பது உணவு சந்தை, அழகு பொருள்கள் சந்தை, உரச்சந்தை என உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட சந்தையாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.