Headphone Selling Ideas - ஹெட்செட் விற்பனை மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சரி வெறும் ஹெட்செட் மட்டும் விற்பதற்கான அவசியம் என்ன, வாடிக்கையாளர்கள் வாங்குவார்களா, ஹெட்செட்டை எங்கு விற்க வேண்டும், அதற்கு கடை அவசியமா, இதனால் நல்ல இலாபம் இருக்குமா, ஓரளவிற்கு வருமானம் வருமா என இத்துனை கேள்விகள் உங்களுக்குள் எழலாம், ஆனால் அதற்கெல்லாம் நிச்சயம் இந்த தொகுப்பு உங்களுக்கு விடை தரும்,
சரி முதலில் ஹெட்செட்டை எங்கு கொள்முதல் செய்யலாம், ஒரு மொத்த விலை கடையை தெரிவு செய்து கொள்ளுங்கள், பர்மா பஜார், தி நகர், மதுரை எலக்ட்ரானிக் வீதி என தமிழகத்தில் நிறைய இடங்கள் இருக்கின்றன, 30 ரூபாயில் இருந்து கூட அங்கு எல்லாம் ஹெட்செட் கிடைக்கும், ஒரு 100 ஹெட்செட்களை முதலில் கொள்முதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
சரி எங்கு விற்பது என்றால் நல்ல மக்கள் கூடும் ரயில்வே ஸ்டேசன் அல்லது நல்ல மெயின் ஆன பஸ் ஸ்டாண்டுகளை தெரிவு செய்து கொள்ளுங்கள், ஒரு ஸ்டாண்டில் உங்கள் ஹெட்செட்டை காட்சிப்படுத்துங்கள், ஒரு ஹெட்செட் 100 ரூபாய், 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்திடுங்கள், ஏன் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும்.
நீண்ட நேரம் பயணம் செய்பவர்கள் தான் அதிகமாக ஹெட்செட்களை பயன்படுத்துகிறார்கள், பெரும்பாலானோர் வீடுகளில் ஹெட்செட் பயன்படுத்தினாலும் எங்காவது ட்ராவல் செய்யும் போது நிச்சயம் மறந்து வைத்து விடுவார்கள், அந்த வகையில் நிச்சயம் நீங்கள் அங்கு ஒரு நகரும் கடையாக மாறினால் நிச்சயம் அவர்களது கண்கள் உங்கள் மீது விழும்.
" தினசரி ஒரு 20 ஹெட்செட்கள் விற்க முடிந்தால் கூட ரூ 1500 முதல் 2000 வரை வருமானம் பார்க்கலாம், இன்று பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் பலரும் முதலில் தெருக்களில் இறங்கி வேலை செய்தவர்கள் தான் ஆதலால் தைரியாம தொழிலில் இறங்குங்கள் எதுவும் தவறில்லை "