Curtain Making Business - ஜன்னல் மற்றும் கதவு திரை தைத்து வீட்டில் இருந்தே எப்படி சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உங்களுக்கு தையல் நன்றாக தெரியும் அல்லது ஓரளவுக்கு தெரியும் என்றால் கூட வீட்டில் இருந்தே உங்களது திரை தயாரிப்பை துவங்கலாம், பொதுவாக ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு திரை போடுவது என்பது வீடுகளில் வழக்கத்திற்கு உரியதாக இருக்கிறது, அந்த வகையில் உங்களால் நல்ல டிசைனரி திரைகள் தயாரிக்க முடியும் என்றால் நீங்கள் இத்தொழிலில் கலக்கலாம்.
முதலில் இந்த தொழிலுக்கு தையல் மெசின் அவசியல் ஒரே ஒரு தையல் மெசின், மெரிட் அல்லது ரமா என ஏதாவது ஒரு பிராண்ட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் டிசைனரி துணிகள் கம்மியான விலையில் மொத்த கடைகளில் கிடைக்கும், ஒரு 150 ரூபாய்க்கு வாங்கினாலே அதில் இரண்டு ஜன்னல் திரையும் இரண்டு கதவு திரையும் தைக்கலாம்.
பொதுவாக ஒரு ஜன்னல் கதவு காம்போ திரைகள் ரூ 300 முதல் ரூ 1000 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, உங்கள் அசலுக்கு ஏற்ப விலை நிர்ணயித்து கொள்ளலாம், திரைகள் தயாரித்து போக மிச்சம் இருக்கும் துணிகளில் தலகாணி உறைகள் கூட தைக்கலாம், மெசின்கள் மட்டுமே உங்களுக்கு இந்த தொழிலில் பெரிய முதலீடு, மற்றபடி நீங்கள் இத்தொழிலை வீட்டில் இருந்தே கூட செய்ய முடியும்.
வீட்டில் இருந்தே செய்தால் எப்படி சந்தைப்படுத்துவது என கேட்டால், மீஷோ, அமேசானில் செல்லர் அக்கவுண்ட் கிரியேட் செய்து கொள்ள வேண்டும், உங்களிடம் GST ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் இல்லை என்றால் மீஷோவில் ரிஜிஸ்டர் செய்து கொண்டு உங்கள் தயாரிப்புகளை விற்கலாம், உங்களால் முடிந்தால் பக்கத்தில் இருக்கும் துணிக் கடைகளுக்கும் மொத்த விலையில் கொடுக்கலாம்.
" சமூக வலைதளங்கள், வாட்சப் குரூப்கள், அருகில் இருக்கும் துணிக்கடைகள் என ஒரு குறிப்பிட்ட சந்தையை மட்டும் வைத்துக் கொண்டு அதிகப்படியான திரைகளை, உறைகளை தயாரித்து சந்தைப்படுத்தினால் குறைந்த பட்சம் ஒரு 10,000 ரூபாய் ஆவது மாதத்தில் ஈட்டி விட முடியும் "