• India
```

கருவேப்பிலை வளர்ப்பு...சிறிய முதலீட்டில்...மாதம் ரூ 10000 வரை வருமானம்...!

Curry Leaves Planting Ideas

By Ramesh

Published on:  2025-01-20 09:21:42  |    898

Curry Leaves Planting Ideas - சிறிய முதலீடு மட்டும் செய்து கருவேப்பிலை வளர்ப்பில் ஈடுபட்டு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Curry Leaves Planting Ideas - கருவேப்பிலை தாளிப்பு என்பது இல்லாத உணவும் இல்லை, கூட்டும் இல்லை அந்த வகையில் கருவேப்பிலை உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, கருவேப்பிலையின் பங்கு என்பது உணவில் மட்டும் அல்லாது, ஒரு சில மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது, கருவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் உடலின் பல உறுப்புகளுக்கும் வேறு எந்த உணவுகளும் வழங்காத பல முக்கிய சத்துக்களை கொடுக்கிறது,

அந்த வகையில் கருவேப்பிலை வளர்ப்பில் ஈடுபட்டு இரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம், கருவேப்பிலை வளர்ப்பு என்பது எளிதாக செய்யக்கூடிய ஒரு பயிரிடலாக பார்க்கப்படுகிறது, ஒரு தோட்டமோ, வீட்டை சுற்றி கொஞ்சம் இடமோ இருக்கும் பட்சத்தில் கருவேப்பிலை வளர்ப்பை எளிதாக செய்ய முடியும்.



இலை தான் இங்கு மூல தனம் என்பதால் மற்ற செடிகளை போல காயுக்காகவோ, பழத்திற்காகவோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, கருவேப்பிலைக்கான தேவை என்பது தினசரி இருப்பதால் அதனை சந்தைப்படுத்துவது என்பதும் எளிது தான், தினசரி வெட்டி காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட் என பல இடங்களில் கருவேப்பிலையை சந்தைப்படுத்தலாம்.

பெரிதாக கருவேப்பிலை வளர்ப்பிற்கு பராமரிப்பு தேவை இல்லை என்பதால், ஒரு முறை பயிரிட்டால் போதும் வாழ்க்கை முழுக்க வருமானம் தந்து கொண்டே இருக்கும், இங்கு தேவை தீர போவதில்லை என்பதால் கருவேப்பிலை வளர்ப்பு நீண்ட காலம் வருமானம் தரும், குறைந்த பட்சம் மாதம் ரூ 10,000 வரை வருமானம் பார்க்கலாம், இங்கு வருமானம் என்பது நீங்கள் சந்தைப்படுத்தும் அளவை பொருத்ததாகிறது.

" கருவேப்பிலை என்பது உணவுச்சந்தைகளில் மட்டும் சந்தைப்படுத்தாமல், கருவேப்பிலை எண்ணெய், கருவேப்பிலை பொடி என பல முறைகளில் சந்தைப்படுத்தினால் இன்னும் அதிகமாக வருமானம் பார்க்கலாம் "