Curd And Butter Milk Selling Ideas Tamil - வீட்டிலிருந்தபடியே தயிர் மோர் விற்பனையில் ஈடுபட்டு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Curd And Butter Milk Selling Ideas Tamil - பொதுவாக தயிர் மற்றும் மோரில் இயற்கையாகவே உடலுக்கு தேவையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன, அந்த வகையில் தயிர் மோர் உணவுகளில் சேர்த்து சாப்பிடும் போது உடல் உஷ்ணத்தை இவை குறைப்பது மட்டும் அல்லாமல், குடல் சம்மந்தமப்பட்ட குடல் புண், குடல் அழற்சி போன்றவைகளை அறவே நீக்கும், தினசரி தயிர் மோர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட வியாதிகளை குறைக்கலாம்.
சரி முதலில் இந்த தயிர் மோர் விற்பனையை இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தே செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம், முதலில் பால் வியாபாரிகளிடம் தினசரி மிச்சம் ஆகும் பாலை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும், பின்னர் இரவே உறை ஊற்றி வைத்து விட்டு மறு நாள் தயிராகவும், தயிரை கடைந்து மோர் ஆகவும் விற்பனை செய்யலாம்.
பொதுவாக தயிர் என்றால் 100 மிலி 10 ரூபாய்க்கு விற்கலாம், மோர் என்றால் ஒரு 250 மிலி 10 ரூபாய்க்கு விற்கலாம், வீட்டிலேயே இயற்கையான முறையில் கலப்படம் இல்லாமல் மாட்டு பால் மூலம் தயாரிக்கப்படும் தயிர் மோர் என்பதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வந்து வாங்கி செல்வார்கள், வீட்டிற்கு வெளியில் இங்கு தயிர் மோர் கிடைக்கும் என ஒரு பலகை தொங்க விட்டால் மட்டும் போதும்.
பெரிதாக இல்லத்தரசிகல் வீட்டில் இருந்தே துவங்க இந்த தொழிலுக்கு முதலீடு பெரிதாக தேவை இல்லை, பாலை கொள்முதல் செய்ய மட்டுமே முதலீடு தேவை, குறைந்த பட்சம் ஒரு 10 முதல் 20 வாடிக்கையாளர்களை தினசரி அணுக முடிந்தால் கூட மாதம் சராசரியாக 8000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும், இல்லத்தரசிகளுக்கு ஒரு எளிதான தொழிலும் கூட இது.
" கல்யாண ஆர்டர்கள், விழாக்கால ஆர்டர்கள் எடுத்தால் தயிர் மோர் விற்பதன் மூலம் இன்னும் அதிகமாக வருமானம் பார்க்கலாம் "