Cucumber Selling Ideas - வெள்ளரிக்காய் விற்பனையில் ஈடுபட்டு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக வெள்ளரிக்காய் என்பது ஒரு தின்பண்ட வகைகளாக தான் பார்க்கப்படுகிறது, ஆனால் அதில் இருக்கும் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய பலன்களும் எக்கச்சக்கம், வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் வறட்சியை தடுக்கிறது, சரும ஆரோக்கியம், சிறுநீரக ஆரோக்கியம், இதய ஆரோக்கியத்திற்கும் வெள்ளரிக்காய் உகந்ததாக பார்க்கப்படுகிறது.
இவைகள் தான் வெள்ளரிக்காய்க்கான தேவைகளை சந்தைகளில் அதிகப்படுத்துகின்றன, பொதுவாக கோடைக்காலங்களில் வெள்ளரிக்காய் விற்பனை அதிகமாக இருக்கும், தென் மாவட்டங்களில் தான் பொதுவாக அதிகமாக வெள்ளரிக்காய்களை பயிர் இடுவார்கள், அங்கு இருந்து பல மாவட்டங்களுக்கும் வெள்ளரிக்காய் என்பது ஏற்றுமதி ஆகிறது.
அந்த வகையில் வெள்ளரிக்காய் என்பதற்கு நல்ல ஒரு சந்தை இருப்பது புலப்படும், முதலில் வெள்ளரிக்காய்களை விவசாயிகளிடமோ ஏஜென்சிகளிடமோ மொத்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ள வேண்டும், ஒரு கிலோ 16 முதல் 20 ரூபாய்க்கு மொத்த விலையில் கிடைக்கும், ஒரு கிலோவில் 5 வெள்ளரிக்காய் கூறுகள் போடலாம், ஒரு கூறு 20 ரூபாய் வரை சந்தைகளில் விற்கமுடியும்.
நாள் ஒன்றுக்கு ஒரு 50 கூறுகள் சாலையோரங்களில் ஸ்டால் போட்டு விற்றாலும் கூட தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்க முடியும், உங்களிடம் ஆள் பலம் இருந்தால் இரண்டு மூன்று ஸ்டால்கள் சாலையோரங்களில் இடைவெளி விட்டு போட்டும் கூட வருமானத்தை அதிகப்படுத்தலாம், வெள்ளரிக்காயை மொத்தமாக வாங்கி கைமாற்றி விட்டும் வருமானம் பார்க்கலாம்.
" வெள்ளரிக்காயை பொறுத்தமட்டில் அது ஒரு பண்ட வகையாக மட்டும் இல்லாமல், சரும் ஆரோக்கியங்களுக்கும் பல்வேறு பார்லர்களின் பயன்படுத்தப்படுவதால் ஒரு துறை கை விட்டால் கூட இன்னொரு துறையை தொற்றி சென்று விடலாம் "