Cow Dung Eco-Friendly Products Business - மாட்டு சாணங்களில் இருந்து எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக மதிப்பு குறித்து அறிதல் என்பது அவசியம். வெறும் மாட்டு சாணத்தில் என்ன செய்ய முடியும் என்றால் அதன் மதிப்பை கூட்டி அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் தான் அதன் வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன.
சாதாரணமாக ஒரு டிராக்டர் மாட்டு சாணங்கள் என்பது கிராமங்களில் வெறும் 1000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய முடியும், காரணம் வெறும் மாட்டு சாணத்தின் மதிப்பு என்பது அவ்வளவு தான், ஆனால் அதில் இருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க முடியும், அதை எவ்வாறு கையாண்டு என்ன செய்கிறோம் எப்படி சந்தைப்படுத்திகிறோம் என்பதில் அதன் சந்தை மதிப்பு இருக்கிறது.
பொதுவாக இவ்வாறாக கையாளப்படும் மாட்டு சாணங்கள் மட்க வைக்கப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படுகின்றன, இதில் உருவாகும் கழிவுகள் திருநீறு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன, இது போக மாட்டு சாணங்களை வறட்டியாக மாற்றி எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள், சிமெண்ட் மற்றும் களிமண்ணுடன் கலந்து செங்கல் தயாரிப்பிலும் சாணங்களை பயன்படுத்துகின்றனர்.
இது போக மாட்டு சாணம் என்பது ஆன்மீக ரீதியாகவும் பயன்பாட்டில் இருக்கிறது, இது போக மாட்டுச்சாணத்தில் இருந்து கலைபொருட்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர், இவ்வாறாக பன்முகமாக மாட்டுசாணங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் போது ஒரு குறிப்பிட்ட சந்தைகளுக்கு உள்ளாகவே மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்க முடியும்.
முதலீடுகள் அதிகம் போட்டு பிளாண்டுகள் அமைத்து பயோ கேஸ் தயாரிப்பில் ஈடுபடுவது, ஏற்றுமதிகளை கையாள்வது, ஈ காமர்ஸ் தளங்களில் சந்தைப்படுத்துவது உள்ளிட்டவாறும் சந்தைகளை கையாளும் போது வெறும் சாணத்தின் மூலம் மாதம் இலட்சங்களில் கூட வருமானம் பார்க்கலாம். சந்தைகளை விரிவுபடுத்துவதை பொறுத்து இலாபங்களின் மதிப்பும் அதற்கேற்ப உயரும்.