• India
```

மல்லி செடி வளர்ப்பு...வெறும் 30 ரூபாய் முதலீடு செய்தால்...மாதம் ரூ 8000 வரை வருமானம்...!

Coriander Planting Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-20 07:14:38  |    1634

Coriander Planting Ideas Tamil - மல்லி செடி வளர்ப்பின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்க்க முடியும், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Coriander Planting Ideas Tamil - மல்லி செடி என்பது பொதுவாக குழம்புகளில், உணவுகளில் வாசத்திற்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்துவார்கள், மல்லி என்பது உணவுகளில் இன்று நேற்று பயன்படுத்தப்படும் ஒரு சமையல் மூலப்பொருள் அல்ல, கிட்டத்தட்ட 5000 வருடங்களாக மல்லி தழை ஆனது உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மல்லி செடி வளர்ப்பின் மூலம் மாதம் ரூ 8000 வரை வீட்டில் இருந்தே வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக மாடியில் ஒரு குடில் அமைத்தோ, அல்லது வெட்ட வெளியில் குடில் அமைத்தோ இந்த மல்லி வளப்பில் ஈடுபடலாம், குடில் குளிர்ச்சியாக சமநிலையான வெப்பத்துடன் செயல்பட சணல் சாக்குகளை குடில் சுவரின் மேல் கட்டி அதன் மீது தண்ணீர் தெளிக்கலாம்,



ஒரு நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 வேளை சாக்குகளுக்கு தண்ணீர் தெளிப்பது அவசியம், பெரிய முதலீடு எதுவும் இந்த மல்லி செடி வளர்ப்பிற்கு தேவைப்படாது, 500 விதை கொண்ட மல்லி செடியின் ஒரு சிறிய விதை பேக்கே வெறும் ரூ 30 தான், நல்ல தரமான விதைகள் ஆன்லைனிலேயே கூட கிடைக்கிறது, மல்லி வளர்ப்பில் மிக மிக முக்கியம் மல்லி வளர்வதற்கு ஏற்ற வெப்ப சமநிலையை மெயின்டெய்ன் செய்வது தான்.

அதை மட்டும் சரியாக செய்து விட்டால் மல்லி செடிகள் அட்டகாசமாக வளரும், காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், அருகில் இருக்கும் கடைகள் என ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்குள் சந்தைப்படுத்தினால் கூட மாதம் ரூ 8000 முதல் 10,000 வரை வருமானம் பார்க்க முடியும், சந்தைப்படுத்துதல் மற்றும் சந்தையில் மல்லி தழையின் விலையை பொறுத்து வருமானம் இன்னும் அதிகம் கூட ஆகலாம்.