Carton Scrap Business Ideas - வேஸ்ட் அட்டைகளை கொள்முதல் செய்து அதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வேஸ்ட் அட்டைகளை கொள்முதல் செய்வதற்கு முன் முதலில் இந்த வேஸ்ட் அட்டைகளுக்கு ஏன் மார்க்கெட்டில் தேவை இருக்கிறது என்பது குறித்து முதலில் அறிந்து கொள்ள வேண்டும், பொதுவாக அட்டைகள் 95 சதவிகிதம் மறு சுழற்சி செய்ய கூடியவை, ஒரு அட்டை செய்வதற்கான ராஃ மெட்டீரியல், பழைய அட்டைகளை விட 2 மடங்கு மதிப்பு அதிகம்.
இதனால் நிறுவனங்கள் பழைய அட்டைகளை கொள்முதல் செய்து அதனை மறு சுழற்சி செய்து கொள்கின்றன, கொரியர் ஆபீஸ், மெடிக்கல் பொருட்கள், பேக்கிங், ஷிப்பிங், தயாரிப்பு நிறுவனங்கள் என அனைத்திலும் இந்த அட்டைகளுக்கான தேவை இருப்பதால் அட்டைகளை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தினால் இலாபகரமாக செயல்படுவது கியாரண்டி.
முதலில் உங்கள் வீட்டு அருகில் இருக்கும், மொத்த கடைகள், மெடிக்கல், பலசரக்கு கடைகள், ஷாப்பிங் கடைகள் என அனைத்திற்கும் நேரடியாக சென்று வேஸ்ட் அட்டைகளை தானே வந்து கொள்முதல் செய்து கொள்வதாக ஒப்பந்தம் வாங்கி கொள்ளுங்கள். ஒரு தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு தினசரி அவர்களுக்கு தொந்தரவு இல்லாத நேரம் பார்த்து அட்டைகளை கொள்முதல் செய்து கொள்ளுங்கள்,
கிலோ 10 ரூபாய்க்கு அவர்களிடம் எடுக்கலாம், தினசரி மால்கள், கடைகள், மெடிக்கல் ஏறி இறங்கினால் ஒரு 100 கிலோ வரை கொள்முதல் செய்யலாம், அதை அப்படியே மொத்தமாக பழைய அட்டைகளை நிறுவனங்களுக்கு கொள்முதல் செய்யும் நேரடி ஏஜென்சிகளுக்கு மாற்றி விட்டால் கிலோவிற்கு ரூ 10 ரூபாய் இலாபம் இருக்கும். பேக்கிங், ஷிப்பிங் கம்பெனிகளுக்கும் கொடுத்தால் அட்டைக்கு பீஸ் ரேட் கொடுப்பார்கள்.
" கிலோ 20 ரூபாய் என்னும் போது ஒரு நாள் ஒன்றுக்கு 2000 கையில் வருமானமாக நிற்கும், அதில் இலாபம் என்றால் பாதிக்கு பாதி இலாபம் இருக்கும், அதிகப்படியான கடைகளை பிடிக்கும் போது இன்னும் வருமானத்தை அதிகப்படுத்தலாம் "