தற்போதைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பின் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளன.
தற்போதைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பின் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இதனால், பல இளைஞர்கள் தங்களுக்கே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என எண்ணுகிறார்கள். குறைந்த முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெறக்கூடிய தொழில்கள் எப்போதும் அதிக கவனம் பெறுகின்றன. அது தொடர்பான தொழில்களை இன்று பார்க்கலாம் வாங்க..
மினரல் வாட்டர் சப்ளை தொழில் மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடியதாகும். இதை தொடங்குவதற்கு ரூ10,000 முதலீடு போதுமானது. எந்த பருவத்திலும் மினரல் நீருக்கான தேவை குறையாது என்பதால், இந்த தொழில் தொடர்ச்சியான வருமானத்தை வழங்கும். மேலும், இதை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம். தண்ணீர் கேன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன், தொலைபேசியில் ஆர்டர்களை பெறுவது முக்கியம். இந்த வணிகத்தில் பணம் உடனடியாக ரொக்கமாக கிடைக்கும் என்பதால், முதல் மாதத்திலேயே லாபம் அடைய முடியும்.
அடுத்ததாக, காலையுணவு விற்பனை தொழிலும் மிகவும் லாபகரமானது. அதிகம் வேலைப்பழுத்தும் வாழ்க்கை முறையால், அலுவலகப் பணியாளர்கள், தனியாக வாழும் மாணவர்கள் போன்றோருக்கு தரமான காலை உணவிற்கான தேவை மிக அதிகம். இதை பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ நடத்தலாம். ஆரம்ப முதலீடு ரூ 20,000 முதல் 25,000 வரை இருக்கும். தொழில் சிறப்பாக செல்வதற்கு, நெருக்கமான வணிக மையங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இதை தொடங்குவது நல்ல முடிவாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே வருமானம் பெரும் வாய்ப்பு உள்ளதால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சிறந்த வணிகமாக இது கருதப்படுகிறது.