Boiled Peanut Business Ideas - பொதுவாக வேர் கடலை என்பது ஒரு சிறந்த பண்டம் மட்டும் அல்ல, நல்ல சத்து மிக்க பொருளும் கூட, நார்ச்சத்து, வைட்டமின் B, வைட்டமின் E, பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து என பல சத்துக்களை உள்ளடக்கியது, பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பண்டம், முக்கியமாக டிராவல் + வேர் கடலை என்பது சிறந்த காம்பினேசனாக இருக்கும்,
பொதுவாக மொத்த விலைக்கு வாங்கும் போது 2 படி வேர் கடலை 100 ரூபாய்க்கு சந்தைகளில் கிடைக்கும், 2 படி என்பது கிட்டத்தட்ட 3 கிலோ இருக்கும், 1 கிலோவில் கிட்டத்தட்ட 20 பாக்கெட்டுகள் போட முடியும், ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்கப்படும், 1 கிலோவிலேயே 200 ரூபாய் வருமானம் பார்த்து விட முடியும், 3 கிலோ அதாவது இரண்டு படி விற்பனை செய்தால் 600 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்,
ஒரு நாளைக்கு உங்களால் 5 கிலோ வரையிலும் விற்பனை செய்ய முடிந்தால் குறைந்த பட்சம் ரூ 1000 க்கும் மேல் வருமானம் பார்க்க முடியும், பொதுவாக அவித்த வேர்கடலையை நகரும் தள்ளு வண்டி, அல்லது நகரும் பஸ்கள், ரயில்வே உள்ளிட்ட பகுதிகளில் பேக்கிங் செய்து விற்கலாம், வறுத்த வேர்கடலை சந்தைகளில் ஏற்கனவே கிடைப்பதால் அவித்த வேர்கடலை தான் பலரும் நாடும் பண்டமாக இருக்கிறது,
இந்த தொழிலில் நட்டம் என்பது கிடையாது, உங்களால் எவ்வளவு சந்தைப்படுத்த முடிகிறதோ அந்த அளவிற்கு இலாபம் பார்க்க முடியும், தினசரி 5 கிலோ என மாதம் முழுக்க அவித்த வேர் கடலையை சந்தைப்படுத்தினால் மாதம் சராசரியாக ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம், வெறும் வேர் கடலையில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா என கேட்டால் நிச்சயம் முடியும், அனைத்தும் நீங்கள் சந்தைப்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது.