• India
```

பாகற்காய் வளர்ப்பு...100 ரூபாய் முதலீடு செய்தால்...மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Bitter Gourd Planting Ideas

By Ramesh

Published on:  2025-01-28 09:52:27  |    448

Bitter Gourd Planting Ideas - பாகற்காய் வளர்ப்பில் ஈடுபட்டு எப்படி ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bitter Gourd Planting Ideas - உலகளாவிய அளவில் அதிக பாகற்காய் விளைச்சலில் ஈடுபடும் நாடு என்பது இந்தியா தான், அதற்கடுத்து சீனா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இடம் பிடித்து இருக்கின்றன, உலகளாவிய அளவில் 70% பாகற்காய் ஆசியாவில் தான் பயிர்டப்படுகிறது, பாகற்காய் என்பது ஒரு உணவு பொருளாக மட்டும் அல்லாமல் பல மருத்துவ குணங்கள் மிக்க காய் வகையாக இருக்கிறது, 

அந்த வகையில் பாகற்காய்கான சந்தை என்பது ஒரு மிகப்பெரிய அளவில் தான் இருக்கிறது, சரி எப்படி இந்த பாகற்காயை வீட்டில் வளர்க்க முடியும் என்றால், முதலில் விதை வாங்க வேண்டும், வேளாண் கல்லூரிகளில் நல்ல தரமான விதைகள் கிடைக்கும், 200 பாகற்காய் விதைகள் 100 ரூபாய் அளவில் தான் இருக்கும், சரியான மண்ணும் 6-8 மணி நேரம் செடி வெயிலில் இருக்கும் படியும் அமைப்பும் இருக்க வேண்டும்,



நீங்கள் தொட்டி வைத்தும் வளர்க்கலாம், இல்லையேல் தோட்டம் இருந்தால் தோட்டத்திலும் விதை போட்டு வளர்க்கலாம், பாகற்காய் வளர சூரிய ஒளி மிக மிக அவசியம், அந்த வகையில் அதிகமாக நிழல் விழும் பகுதிகளில் விதைக்க கூடாது, பாகற்காய் அறுவடைக்கு தயாராக குறைந்தபட்சம் 70 நாட்கள் முதல் அதிகபட்சம் 90 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

உரத்திற்கு காய்கறி கழிவுகள், பூச்சி வந்தால் இயற்கையான நவபாசன உரமும் பயன்படுத்தலாம், தேங்காய் நாரை அரைத்து மண்மேல் தூவி விட்டா நீரை பிடித்து வேருக்கு அது நேரடியாக கொடுக்கும், பாகற்காயின் விலை 1 கிலோ சராசரியாக 100 ரூபாய் வரை விற்கப்படும், ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு 4 கிலோ சந்தைப்படுத்த முடிந்தால் கூட சராசரியாக மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம்.

" செடிகளின் இலையையும் விதையையும் கூட அரைத்து பொடியாக்கி விற்கலாம், சர்க்கரை வியாதிகளுக்கு அது சிறந்த மருந்தாக இருக்கும் "