Betel Leaf Business Ideas Tamil - சிறிய வெத்தலை பாக்கு கடை வைப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
வெத்தலை பாக்கு கடை முதலில் அதற்கான தேவை என்ன இருக்கிறது என்பது குறித்து முதலில் பார்க்கலாம், பொதுவாக சம்பிரதாயங்களிலும் சரி, விழாக்களிலும் சரி, கோவில்களிலும் சரி, வைபோவங்களிலும் சரி, சிறு அர்ச்சனை என்றாலும் சரி, ஜோசியம் என்றாலும் சரி, பீடா, ஒரு சில ஆயுர்வேத மருத்துவ பிரிவு என எல்லா இடங்களிலும் வெத்தலைக்கான தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது.
அந்த வகையில் வெத்தலை பாக்கு கடை என்பது சிறிய முதலீட்டில் ஏதாவது ஒரு தொழில் துவங்க வேண்டும் என்பவர்களுக்கு ஒரு சிறந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது. வெத்தலை எங்கு கொள்முதல் செய்யலாம் என்றால், தமிழகத்தை பொருத்தமட்டில் சோழவந்தான், ஆத்தூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகள் தான் வெத்தலையை அதிகமாக பயிரிடும் பகுதிகளாக பார்க்கப்படுகின்றன.
நேரடியாக அங்கே சென்று வெத்தலையை சரியாக கொடுக்கின்ற ஒரு ஒன்றிரண்டு ஏஜென்சிகள் அல்லது விவசாயிகளை முதலில் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும், முதல் கொள்முதல் மட்டும் நேரடியாக பேசிக் கொண்டு அடுத்து எல்லாம் மொபைலில் கூட பேசிக் கொள்ளலாம், கடை அமைப்பை பொறுத்தமட்டில் கோவில்கள், மார்க்கெட்கள் இருக்கும் பகுதி சிறந்த அமைப்பாக இருக்கும்.
மொத்த விலைக்கு 100 வெத்தலை உள்ள கட்டு 90 ரூபாய் வரைக்கும் விற்கப்படும், அசல் விலை என்பது அன்றைய மார்க்கெட்டை பொறுத்து 60 முதல் 70 ரூபாய் வரை இருக்கும், கோவில் அர்ச்சனை, தாம்பூலத்தில் வைக்க என கேட்கும் போது 5 வெத்தலை 3 பாக்கு உள்ள ஒரு கட்டு, 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது, விசேஷ நாட்களில் ஒரு நாளுக்கு 100 கட்டுக்கு மேல் கூட சந்தைப்படுத்தலாம்.
" சராசரியாக ஒரு சிறிய வெத்தலை கடையில் மாதம் ரூ 15000 வரை வருமானம் பார்க்கலாம், விசேஷ மாதங்களில் இந்த வருமானத்தை இரட்டிப்பாக்க கூட முடியும் "