இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் நிலையான வேலைகளை விட சொந்த தொழிலை தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் நிலையான வேலைகளை விட சொந்த தொழிலை தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, குறைந்த சம்பளம், அதிக வேலை நேரம் போன்ற காரணிகள் அவர்களைச் சொந்த முயற்சிகளில் ஈடுபட தூண்டுகின்றன. இவ்வாறு தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களை ஆதரிக்க, மத்திய அரசு பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிகள் ₹10 லட்சம் வரை கடன் வழங்கும். குறிப்பாக, தையல், முடிதிருத்தம், மருத்துவக் கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற சேவைகளை வழங்கும் தொழில்கள் தொடங்க விரும்புவோருக்கு இந்த வாய்ப்பு மிக உதவியாக இருக்கும். மேலும், இந்தக் கடனுக்கு 35% வரை மானியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறையில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு அதிகபட்சமாக ₹25 லட்சம் வரை கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது, எந்தவொரு தயாரிப்பு தொழிலாக இருந்தாலும், இந்தத் திட்டத்தின் கீழ் கடன் கிடைக்கலாம். இந்தத் திட்டம், தொழில் தொடங்குபவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே ஒரு தொழில் செய்து அதை விரிவுபடுத்த விரும்புவோருக்கும் பயன்படும்.
PMEGP கடனைப் பெற விரும்புவோர், தங்கள் அருகிலுள்ள வங்கிகளுக்கு சென்று இந்தத் திட்டம் குறித்து மேலும் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். புதிய தொழில் முனைவோர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.