Art Objects Making In Kadal Sangu - கடல் சங்குகள் மற்றும் சிப்பிகள் மூலம் கலைப் பொருள்கள் தயாரித்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடல் சங்குகள் மற்றும் சிப்பிகள் சாதாரணமாக பீச்களில் கண்டெடுக்க முடியும், அலை அதிகமாக அடிக்கும் போது கடலின் ஆழத்தில் இருக்கும் சங்குகள் மற்றும் சிப்பிகள் கரை ஒதுங்கும், நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சிப்பிகளும் சங்குகளும் இப்படி கரை ஒதுங்கும் போது, அதை கைப்பற்றி அதை ஒரு தொழிலாக மாற்றி வருகின்றனர்.
சரி அந்த சங்குகள் மற்றும் சிப்பிகளை வைத்து என்ன தான் செய்ய முடியும் என்றால், கலைப் பொருள்கள் செய்யலாம், கிப்டுகள் செய்யலாம், பெயர் எழுதி கொடுக்கலாம், கீ செயினாக மாற்றலாம் என இவ்வளவு விடயங்கள் இருக்கின்றன, இவ்வாறு செய்வதற்கான மூலப் பொருள்கள் மட்டும் வாங்கி வைத்தால் போதும், இந்த தொழிலில் சிறக்கலாம்.
சரி இப்படி ஒரு கடையை எங்கு தோற்றுவிப்பது என்றால் பீச் அருகிலேயே துவங்கலாம், நீங்கள் தெருக்கடைகளாக வைத்தாலும் சரி, ஒரு கடையாக அமைத்தாலும் சரி, மக்கள் எப்போதுமே வித்தியாசமான கலைப் பொருள்களை விரும்பி வாங்குவார்கள், அந்த வகையில் சங்கினால் செய்யப்படும் கலைப் பொருள்களுக்கும் சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது.
சரி எவ்வளவு மதிப்பில் விற்க முடியும் என்றால், பெரிய சங்குகள் எல்லாம் ரூ 200 முதல் 500 மதிப்பு வைத்து விற்கப்படுகிறது, சிறிய சங்குகளில் பெயர் எழுத 50 முதல் 70 ரூபாய், சிப்பி மற்றும் சங்கு கீ செயின்கள் ரூ 30 வரை விற்கப்படுகிறது, இவ்வாறாக தின்சரி ஒரு 15 முதல் 20 வாடிக்கையாளர்களை அணுக முடிந்தால் கூட தினசரி ரூ 1000 வருமானம் பார்த்து விடலாம்.